Ind-Zim: தொடரில் இந்திய வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு ஒரு-நாள் போட்டிகளை வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட ரிசல்ட்தான் இது. நாளை (21/8/2022) நடக்கப்போகும் ஆட்டமுடிவும் இப்படித்தான் இருக்கும். இந்தியா ஓரிரு புதியவர்களை அறிமுகம் செய்யக்கூடும் என்பதைத்தவிர சுவாரஸ்யம் ஏதுமில்லை.

சர்வதேசப்போட்டி அனுபவம் அதிகமில்லாத, கத்துக்குட்டி வீரர்களை அதிகமாகக் கொண்ட ஒரு அணியை வீழ்த்தியதில் இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ள ஏதுமில்லை. ஆயினும் இந்தத் தொடர் மற்ற வரவிருக்கும் தொடர்கள் போலவே ஒரு சர்வதேச கிரிக்கெட் கமிட்மெண்ட்.

முதல் மேட்ச்சில் ஜிம்பாப்வே 189 அடிக்கக் காரணம் 9-ஆவது விக்கெட்டிற்காக பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய பௌலிங்கை ஆடிக்காண்பித்த இரு வீரர்கள் -பௌலிங் ஆல்ரவுண்டர்கள்: ப்ராட் எவான்ஸ் (Brad Evans), ரிச்சர்ட் இங்கராவா (Richard Ngarava). அணியின் பிரதான ஆட்டக்காரர்களைவிடவும் முதிர்ச்சி, ஆக்ரோஷம் காட்டி ஆடினார்கள். ஜிம்பாப்வேயின் எதிர்கால ஸ்டார்களாக உருவெடுக்கலாம். ஆனால் ஜிம்பாப்வே பௌலர்களால் ஒரு இந்திய விக்கெட்டையும் சாய்க்கமுடியவில்லை என்பது ஆச்சர்யம்தான். ஷுப்மன் கில்லும் (Shubman Gill), ஷிகர் தவணும் 80+ விளாசினார்கள். (Score: Zim 189. India 192 (no loss).

Sanju Samson

நேற்று நடந்த போட்டியில் முதிர்ந்த வீரரான ஷான் வில்லியம்ஸும் (42), இளம் பேட்ஸ்மன் ரயான் பர்ல் (Ryan Burl, 39 Not ourt)-உம் பொறுப்பாக ஆடினார்கள். இருந்தும் 161-ஐத் தாண்டமுடியவில்லை ஜிம்பாப்வேயினால். எளிதாக இந்தியா இலக்கைத் தொடும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் 5 விக்கெட்டுகளை பலிகொடுத்தபின் தான் வெற்றி கிடைத்தது. இந்திய கேப்டன் ராஹுல் துவக்க ஆட்டக்காரராக இறங்கி ஒரு ரன்னில் பெவிலியனுக்கு ஓடிவந்தார்! விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்ஸன் நன்றாக ஆடி, 4 சிக்ஸர் தூக்கி 43 நாட் அவுட். ஷர்துல் டாக்குருக்கு 3 விக்கெட். (Score: Zim 161. India 167/5. )

நாளைய போட்டியிலாவது மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ராஹுல் த்ரிப்பாட்டியை இந்தியா களத்தில் இறக்குமா? இல்லை, ஜிம்பாப்வேக்கு டூரிஸ்ட் விஸாவில் தான் அவர் அனுப்பப்பட்டிருக்கிறாரா !

**

2 thoughts on “Ind-Zim: தொடரில் இந்திய வெற்றி

  1. நான் இந்தப்பதிவைப் படிக்கும்போது இந்தியா அந்த மிச்ச ஒரு நாள் போட்டியையும் (எப்படியோ!) ஜெயித்து விட்டது.  ஜிம்பாப்வே சிக்கந்தர் வற்றிக்குஅ ராகி கொண்டு வந்திருந்தார் அவர்கள் பக்கத்தை.

    Like

    1. @ ஸ்ரீராம்: கடைசி மேட்ச்சில் தூள்கிளப்பிய சிக்கந்தர் ரஸா, கிட்டத்தட்ட போட்டியை ஜிம்பாப்வேக்கு ஜெயித்துக்கொடுத்துவிட்டார்தான்.

      புதிய பதிவு சற்றுமுன் !

      Like

Leave a comment