Monthly Archives: October 2016

க்ரிக்கெட்: இந்திய சுழலில் மூழ்கிய நியூஸிலாந்து

தொடரின் கடைசிப் போட்டிக்கான கும்ப்ளே-தோனியின் சுழல் வியூகம் தீபாவளியன்று (29-10-16), விசாகப்பட்டினத்தில் விஸ்வரூபமெடுத்தது. அமித் மிஷ்ரா & Co.- வின் அசுரத் தாக்குதல்களில் நிலைகுலைந்தது நியூஸிலாந்து. முதலில் பேட் செய்த இந்தியா 280-க்குக் குறையாமல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டவேளையில், அதனால் முடிந்தது 269. அத்திபூத்தாற்போல் பெரிய இன்னிங்ஸ் விளையாடும் ரோஹித் ஷர்மா 65 பந்துகளில் தீபாவளிப் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், சமூகம், புனைவுகள் | Tagged , , , , , , , , , , , | 1 Comment

க்ரிக்கெட்: தோனி ஆடாத ஆட்டம்

அவருடைய சொந்த மைதானமான ராஞ்சியில் நேற்று (26-10-16), தோனியின் ஆட்டத்தைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம் வந்து ஆவலோடு காத்திருந்தது. ஆனால், கோஹ்லி அவுட்டானபின் மைதானத்தில் இறங்கிய தோனியின் ஆட்டம், ஈரப்பட்டாசாகப் பிசுபிசுத்தது. அபாரமாகப் பந்துவீசி, கேட்ச்சுகளையும் விரட்டிப் பிடித்த நியூஸிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்து ஒரு-நாள் க்ரிக்கெட் தொடரை 2—2 என சமன் செய்தது. டாஸை வென்று … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | 2 Comments

மொஹாலியில் கோஹ்லி !

நேற்று(23-10-16) பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் விராட் கோஹ்லி ஆடிய ஆட்டமிருக்கிறதே, அடடா! ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு? 154 நாட் அவுட்! `இலக்கைத் துரத்த ஆரம்பித்துவிட்டால், கோஹ்லியை நிறுத்தமுடியாது`! இது வில்லியம்சனின் கமெண்ட். இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. டாம் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட் | Tagged , , , , , , | 1 Comment

அடங்காதது

தமிழின் தற்காலக் கவிதைகள் தனக்குப் பிடித்ததென அவர் போட்ட தொகுப்பில் ஐம்பது இவர் போட்டதில் நூறு எடுத்துப் பார்த்தேன் எதிலும் இல்லை என் கவிதை புரிகிறது ஐம்பதிலும் நூறிலும் அடங்கிவிடும் எழுத்தா என்னுடையது ? அட போங்கடா ! **

Posted in இலக்கியம், கவிதை, நகைச்சுவை, புனைவுகள் | Tagged , , | 2 Comments

கிரிக்கெட்: டெல்லி மேட்ச்சை நழுவவிட்ட இந்தியா

நியூஸிலாந்துக்கெதிரான ஒரு-நாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று(20-10-16) டெல்லியில் நடந்தது. வழக்கம்போல் நியூஸிலாந்து முதல் பேட்டிங் செய்தது. உமேஷ் யாதவின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாத மார்ட்டின் கப்ட்டிலை முதல் ஓவரிலேயே இழந்தது. தோல்விமேல் தோல்வியாகப் பார்த்து அலுத்துப்போன கேப்டன் வில்லியம்சன் நியூஸிலாந்தின் விதியைத் தன் கையில் எடுத்துக்கொண்டார்போலும். இந்தியா டூரில் முதன்முதலாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , | 2 Comments

ஒருநாள் கிரிக்கெட்: தர்மசாலாவில் இந்தியாவின் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3-0 என்று விராட் கோஹ்லியின் தலைமையில் வென்ற இந்தியா, மகேந்திர சிங் தோனியின் தலைமையில் ஒரு-நாள் தொடரை அக்டோபர் 16-ல், ஹிமாச்சல் பிரதேஷின் தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது. டெஸ்ட் தொடரிலிருந்து மாறுபட்ட அணி, தோனிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மேட்ச்-வின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் இல்லை. அவரோடு முகமது ஷமி, … Continue reading

Posted in கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , | Leave a comment

ஆப்பிரிக்காவின் கொம்பாக ஒரு நாடு

ஆப்பிரிக்காவின் வடபகுதியில் இருக்கும் சோமாலியா எனும் சிறுநாட்டில் சில வருடங்கள் நான் வசிக்க நேரிட்டது. ஏனைய நாடுகளிலிருந்து வெகுவாக மாறுபட்ட, வினோதமான சமூக வாழ்க்கை. பொதுவான பயணக்குறிப்புகள் போலல்லாது, அனுபவங்களின் சிறுதொகுப்பாக நான் எழுதிய கட்டுரை ஒன்று `உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா` என்கிற தலைப்பில் `சொல்வனம்` இணைய இதழில் (இதழ்:159 தேதி:16-10-2016) வெளியாகியுள்ளது. எனது வாசகர்களை … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , | 5 Comments