உள்ளும் உணர்வும்

எனக்குள்ளிருந்து

என்னை அவதானித்து

என்னைத் தொடர்ந்து

என்னைத் தூக்கி நிறுத்தி

என்னைக் கூடவே அழைத்துச் சென்று

என்னைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும்

உன்னை

இல்லவே இல்லை என்று

எப்படிச் சொல்வேன் நான் ?

* * *