Monthly Archives: October 2015

இல்லையெனில்

வெங்காயம் இல்லாமல் ஒரு வீடா சட்னி அரைக்க வெங்காயம் இல்லை என்றதும்தான் போட்டேன் இப்படி காலையில் ஒரு கூப்பாடு யோசித்துப் பார்க்கையில் ஏதேதோதான் இல்லை இந்த நாட்டில் இருந்தும் ஓடிக்கொண்டிருக்கிறதே நாடே ஓடிக்கொண்டிருக்கையில் ஓடாதா வீடு? ** Advertisements

Posted in கவிதை, புனைவுகள் | Tagged , , | 6 Comments

என்ன ஆகுமோ

முன்ன மாதிரியா இருக்கு காலம் அலுத்துக்கொண்டாள் அன்று பாட்டி காலங்கெட்டுப்போய்க் கெடக்குடி எப்போதும் எச்சரித்தாள் அம்மா நாசமாப்போன காலத்துல எவன நம்பறது என்னதான் செய்யறது கவலை விரித்தது வலை அப்பாவுக்கு காலங்காலமாய்க் கடுப்படிக்கும் காலந்தான் சரியாகிவிடுமா சதிசெய்தே உடன் வருமா **

Posted in கவிதை, புனைவுகள் | Tagged , , | 4 Comments

வெங்கட் சாமிநாதன்

நான் படிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுவதைவிட, விமரிசனம் என்கிற பெயரால் தாக்கப்படுவதையே விரும்புவேன். -சாமுவேல் ஜான்சன். எந்த ஒரு கலாச்சாரத்திலும், மொழியிலும் இலக்கிய-கலை விமரிசனம் என்பது ஒரு சீரிய கலை. எளிதான விஷயம்போல் தோன்றும் சிக்கலான சங்கதி! எளிதில் கைவரும் கலை அல்ல. நவீனத்தமிழின் இலக்கிய விமரிசக முன்னோடிகளாக வ.வே.சு ஐயர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறிப்பிடமுடியும். அண்மைக்காலத்தில், … Continue reading

Posted in கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , | 2 Comments

புதுக்கோட்டை புகுவிழா

தமிழ்ப் பதிவர் சந்திப்பு விழாவுக்கென பெங்களூரிலிருந்து பயணித்து, அக்டோபர் 10-ஆம் தேதி புதுக்கோட்டை போய்ச் சேர்ந்தேன். பகலில் கொஞ்சம் உறங்கிக் கழித்துவிட்டு மாலையில் நகரின் திருக்கோகர்ணம் பகுதிக்குச் சென்றேன். ஆராய்ச்சி நூலகம் `ஞானாலயா` அங்குதான் இருக்கிறது. எனக்கு வழிகாட்டியவர்கள் ஒரு கிளைச்சாலையில் போகச் சொல்ல, மெல்ல நடக்க ஆரம்பித்தேன். திடீரென இருள் சூழ, ஏதோ ஆப்பிரிக்க … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை | Tagged , , , , , | 6 Comments

புதுக்கோட்டையும் புத்தகங்களும்

புதுக்கோட்டை என்றதும் கல்லூரி நாட்கள் நினைவில் நிழலாடுகின்றன. அந்தக் காலம். ஒரு கனவுலகம். (`ஸ்வப்பன வாழ்வில் மகிழ்ந்தே..!` தியாகராஜ பாகவதரின் பாடல் வரிகள்வேறு நினைவில் மோதுகிறது.) அந்த உலகம் குழந்தைத்தனம் மாறாத அப்பாவி மனங்களுக்கானது. மனதில் தடதடக்கும் இதமான உணர்வுகள், நினைவுகள், ஆசைகளுக்கானது. ஹ்ம்..எதற்காகவோ ஆரம்பித்து, நான் எங்கெங்கோ போக ஆரம்பித்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது … Continue reading

Posted in கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , | 3 Comments

அதர்ம காலத்தில்

அறஞ்செய விரும்பு அவருக்கென்ன சொல்லிச் சென்றுவிட்டார் அந்த மூதாட்டி செயவிரும்புகையில் ஏதேதோ கேள்விப்படுகிறேனே என்னென்னமோ தெரிய வருகிறதே குழப்பம் கூத்தடிக்கிறதே எதற்கு நமக்கு இந்த வம்பு விரும்பிவிட்டு விட்டுவிடட்டுமா எதையாவது செய்யப்போய் பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டால் ? **

Posted in கவிதை, புனைவுகள் | Tagged , , , | Leave a comment

ஈர்க்கும் இணையம் – தமிழ்ப்பதிவர் சந்திப்பு

புதுக்கோட்டை. தொண்டமான் அரசர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நகரம். ஆங்கிலேயர்கள், வேறுவழியின்றி இந்தியசுதந்திரப் போராட்டத்திற்கு அடிபணிந்து, ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்து வெளியேறிய தருணம். பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் மன்னர்களால் ஆளப்பட்ட வெவ்வேறு தனி ராஜ்யங்கள் (சமஸ்தானங்கள்), சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சீரிய முயற்சியினால் ஒருங்கிணைக்கப்பட்டு `இந்திய … Continue reading

Posted in கட்டுரை | Tagged , , , | 4 Comments