Monthly Archives: April 2014

அதிசய மரம்

அவளின் குளிர்ப்பார்வையில் உறைந்துவிட்டிருந்தேன் அவ்வாறே இயங்கும் காலமும் சுற்றியிருந்த எல்லாமும் அவளகன்றபின்தான் அதைக் கவனிக்க நேர்ந்தது அழகும் குதூகலமுமாய் பூத்துக்குலுங்கும் இளம் மரம் இந்தவழியாகத்தானே தினமும் சென்றுகொண்டிருக்கிறேன் நேற்றும் இங்குதான் இருந்ததா இது? **

Posted in Uncategorized | Leave a comment

பயன்படலாம் ஒரு வேளை

விக்ரகம் செய்வதற்கேற்ற உயர்ந்தவகைக் கல் அல்ல வெறும் கருங்கல்தான் நான் உட்கார முயற்சித்தால் பின்புறம் குத்தக்கூடும் எதற்கும் ஒத்துவராத எசகு பிசகான பாறாங்கல் கருப்பாய்ப் பறந்து செல்லும் காகத்திற்கு ஒரு வேளை பயன்படக்கூடும் இளைப்பாற உட்கார்ந்து எச்சத்தை இறக்கிவிட்டு எழுந்து பறப்பதற்கு **

Posted in Uncategorized | Leave a comment

அழைக்கும் நாடு !

அப்பாவி இந்தியனே! ஆயிரம் பிரச்சினைகளுக்கு நடுவில் அயர்ந்து போய் நீ கிடப்பது தெரியும் இருந்தும் மறந்து விடாமல் இடப்பட்ட கடமையைச் செய் பத்தாம்பசலி அரசியல்வாதிகளின் பகட்டு வார்த்தைகளில் கிளுகிளுத்து பலனை எதிர்பார்த்துப் பலமுறை ஏமாந்திருக்கிறாய் படுத்த பாயைச் சுருட்டுவதுபோல் பாரில் உன்னை அடையாளம் காட்டும் பாசமிகு நாட்டையே சுருட்டி எடுத்து ஓட முயற்சிக்கும் மதம் பிடித்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

நரேந்திர மோதி – தகுதி வாய்ந்த தலைவன்

1977- க்குப் பின் இந்தியத் திருநாட்டின் மிக இன்றியமையாத பொதுத்தேர்தல் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைமையில் நடந்த 10-வருட அபத்த ஆட்சி ’அப்பாடா! ஒழிந்தது ஒருவழியாக’ என்றிருக்கிறது நாட்டு மக்களுக்கு. இவ்வளவு கேவலமான, ஊழல் மலிந்த, அதைப்பற்றிய எந்த வெட்கமும், மான உணர்ச்சியும் இல்லாத, நிர்வாகத்திறமை என்பது மருந்துக்கும் கூடக் காணப்படாத குப்பைத்தொட்டி ஆட்சியை இந்த … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இருக்கிறான்

ஜில்லென்று வருகிறது காற்று குளிரெடுக்கிறது படபடவென்று ஆரம்பித்து பலமாகப் பெய்கிறது மழை நிரூபணமாகிறது நாட்டில் நல்லவன் ஒருவன் இருக்கிறான் என்பது **

Posted in Uncategorized | 2 Comments

அதிகாலையில் அம்மா

தூக்கத்தின் துணையிழந்து தனியன் ஆகிறேன் இருட்டு விலக மறுக்கும் இளங்காலைப் பொழுது அம்மா தூங்குகிறாளா இல்லை நினைவுகளின் கும்மிருட்டில் எதையேனும் தேடுகிறாளா **

Posted in Uncategorized | Leave a comment

மனமெலாம் நீ

இரவினில் வரும் நிலா அழகு குளிர்கால இரவினில் அழகே நிலா மரங்களின் உச்சியில் அடர்ந்த வனத்தில் தோன்றுமாயின் மரமே நிலா வனமே நிலா மனமே நிலா **

Posted in Uncategorized | 2 Comments