Monthly Archives: June 2016

அமைதி

கொஞ்ச நாட்களாகப் பெரிய, பெரிய கட்டுரைகள் அலுப்படித்திருக்கலாம். ஒரு சின்ன கவிதையைப் பார்க்கலாமா? அமைதி உன்னைப் போற்றுகிறேனா கைகூப்பி வணங்குகிறேனா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அப்படி ஒரு அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை எல்லாமே நீ எல்லாவுமாக நீ எனத் தோன்றுகிறது நிறைவாக இருக்கிறது ** Advertisements

Posted in இலக்கியம், புனைவுகள் | Tagged , , | 2 Comments

மறைவு: கவிஞர் குமரகுருபரன்

நல்லதொரு கவிஞராக இனம் காணப்பட்டிருந்த குமரகுருபரன் 19-6-2016 அன்று காலமான செய்தி கலங்கவைக்கிறது. நெருக்கும் நிம்மதியின்மையையும், தனிமையின் கடுமையையும் கவிதைகளாகப் பொங்கியவர். படித்தவர்களின் மனதில் இன்னும் நிறைய எழுதுவார் என்கிற எதிர்பார்பார்ப்பைக் கிளர்ந்தெழச் செய்தவர். ஆனால், என் செய்வது? காலனின் கணக்கு கடுங்கணக்காயிற்றே ! இளம் வயதிலேயே இந்த உலகைவிட்டுப் புறப்பட நேர்ந்துவிட்டது கவிஞருக்கு. ராஜபாளையத்துக்காரர். … Continue reading

Posted in இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , | 3 Comments

ஆதிசங்கரர் –4 : இந்துமத மறுமலர்ச்சி

ஆதிசங்கரர்-3: வாடிப்போன மாலையின் தொடர்ச்சி… ஆதிசங்கர பகவத்பாதர் ஹிந்து மதத்தின் சைவப்பிரிவுக்கு மட்டுமே ஆச்சாரியர் அல்லது குரு என்கிற கருத்து பலரிடையே நிலவுகிறது. அது உண்மையல்ல. அவர் ஒட்டுமொத்த இந்து மதத்தின் பிரதான ஆச்சாரியர்களில் ஒருவர். அவருக்கு `ஷண்மத ஸ்தாபனாச்சாரியர்` என்கிற பெயரும் உண்டு. ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்? அவர்தான் இந்து மதத்தை ஸ்தாபித்தாரா? அதற்குமுன் … Continue reading

Posted in ஆன்மிகம், கட்டுரை, தேசம், பக்தி இலக்கியம் | Tagged , , , , , , , , , | 6 Comments

ஆதிசங்கரர்- 3 : வாடிப்போன மாலை

(`ஆதிசங்கரர்- பால சந்நியாசி` மற்றும் `எதிரே வந்தவன்` ஆகிய பாகங்களின் தொடர்ச்சி) மகிஷ்மதியில் வாழ்ந்துவந்த மண்டன மிஷ்ரா, கர்மமீமாம்ச முறையில் நம்பிக்கை கொண்டவர். பூஜைகள், ஹோமங்கள் போன்று கிரமப்படி பக்தியோடு செய்யப்படும் சடங்குகளே பரப்பிரும்மத்தை நோக்கி ஒருவனை அழைத்துச் செல்லும் சக்தி உடையவை என்கிற தீர்மான முடிவு கொண்டவர். கடவுளை நோக்கிய சந்நியாசிகளின் வழியை ஒருபோதும் … Continue reading

Posted in ஆன்மிகம், பக்தி இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , , | Leave a comment

ஆதிசங்கரர் – 2 : எதிரே நின்றவன்

கோவிந்த பகவத்பாதர் என்னும் ஆச்சார்யரை நர்மதா நதிக்கரையில் ஓம்காரேஷ்வர் என்னுமிடத்தில் ஆதிசங்கரர் சந்திக்க நேர்ந்தது. உபநிஷதங்களில் தேர்ந்தவரான கௌதபாதர் என்னும் குருவின் சீடர் அவர். வேதசாஸ்திரங்களில் தலைசிறந்தவர் எனப் போற்றப்பட்டவர். நர்மதா நதிக்கரைக்கு வந்த ஆதிசங்கரர் நதியில் சீறும் வெள்ளப்பெருக்கை தன் கமண்டலத்தில் அடக்கினார். அதனைக்கண்டு அதிசயித்த பகவத்பாதர் இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு அதீத … Continue reading

Posted in Uncategorized | 6 Comments

ஆதிசங்கரர் – பால சந்நியாசி

இந்தியா. 8-ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும், 9-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். நாட்டில் மக்களின் இறை நம்பிக்கைகள், தத்துவார்த்த, ஆன்மீக சிந்தனைகள், மழைக்காளான்களாய் முளைத்துவிட்டிருந்த முரண் பல கொண்ட சிறுசிறு மதக்குழுக்களால், அமைப்புகளால்(religious sects) சிதறடிக்கப்பட்டுவிட்டிருந்தன. தங்களை குருக்கள், ஆச்சாரியர்கள் என அழைத்துக்கொண்டு சாதாரணர்களிடையே பெரும் சிந்தனைக் குழப்பத்தை கிளறிவிட்டு, மன அமைதியைத் தவிடுபொடியாக்கியிருந்த போலிகள், புரட்டுகள் … Continue reading

Posted in ஆன்மிகம், சமூகம், புனைவுகள் | Tagged , , , , , , , | 2 Comments

முக்கியம்

மணவாழ்க்கைக்கு உண்மை முக்கியம் மயக்கும் சன்னி லியோன் சொன்னதாக மாலைப் பத்திரிக்கையில் பரபரப்புச் செய்தி உண்மைதான் தாயே எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் உண்மைதான் முக்கியம் உன் மையோ என் மையோ நிறம் மாற்றலாம் கதை மாற்றாது **

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , | 5 Comments