Monthly Archives: September 2016

டெஸ்ட் கிரிக்கெட்

`காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?` என்கிற தலைப்பில் என்னுடைய கட்டுரை ஒன்று, பிரபல இணைய இதழான `சொல்வன`த்தின் நடப்பு இதழில் (இதழ் : 157, 20-9-16) வெளியாகியுள்ளது. இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன் கிரிக்கெட் ப்ரேமிகளுக்காக: http://solvanam.com/?p=46607 நன்றி: சொல்வனம் **

Posted in கட்டுரை, கிரிக்கெட் | Tagged , | 1 Comment

ந்யூமிஸ்மேட்டிக்ஸ் !

பெங்களூர். ஒரு அமைதியான சனிக்கிழமை. அதாவது காவிரி தலைவிரித்து ஆடுவதற்கு கொஞ்சம் முன்பான காலம். காலை 8 ¾ மணிக்குள் வெங்கடரமண ஸ்வாமி கோவிலுக்குப்போனால்தான் சனிக்கிழமை விசேஷ தீபாராதனையை பார்க்கமுடியும் என்பதால் அவசர அவசரமாகக் கிளம்பினோம். உபர் டேக்சி பிடித்துக்கொண்டு ஹென்னூரிலிருந்து குந்தனஹள்ளிக்கு வேகமாகச் சென்றோம். பெங்களூரில் அலுவலக நாட்களில் சாலைப்போக்குவரத்து லட்சணம் இருக்கிறதே, மகா … Continue reading

Posted in அனுபவம், ஆன்மிகம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , , , | 3 Comments

இரவினிலே

கல்யாணச்செலவு கணக்கில் வருவது சிந்திக்கும் வேளையிலும் கவலை தருவது செலவு செய்தபின்னும் செய்வதறியாது கலங்கவிடுவது காதற்செலவின் கதையோ அலாதியானது ஒரு கணம் நினைத்தாலே இனிப்பது ஒரு கணக்கிலும் வராதது செலவு செய்யும்போதும் செய்தபின்னரும்கூட களிப்பையே தருவது காதல்வரை செலவு கனவினிலே வரவு என வைத்துக்கொள்ளலாமா **

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை | Tagged , , , , | 2 Comments

பார்த்ததும் பார்க்காததும்

இப்போதுதான் தட்டுப்பட்டது கையில் காசு இல்லை என விரட்டிவிட்டோமே இருக்கிறாளே அதோ என நினைத்து போய்க் கொடுத்துவிட்டு சாலையின் இந்தப் பக்கம் வந்து நின்றேன் கொஞ்சநேரத்தில் மீண்டும் முன்னால் நின்றிருந்தாள் தாங்கிய குழந்தையும் ஏந்திய கையுமாய் இப்போதுதானே கொடுத்தேன் என்றேன் இல்லை கொடுக்கவில்லை என்றாள் தலையாட்டி மறுத்தாள் கையைப் பார்த்திருப்பாள் முகத்தைப் பார்க்கவில்லையோ ஆமா .. … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, சமூகம் | Tagged , , , , | 2 Comments

திரிவேணி சங்கமம்

வெட்டவெளியில் தனியாக பலூனுடன் விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை சிறுவிரல்களிலிருந்து புறப்பட்ட நெடுநூல் வானத்தை முட்ட முயற்சிக்கும் சிவப்புப் பலூனில் முடிந்திருந்தது நீலவானில் அசைந்து அசைந்து வேடிக்கைக் காட்டிய பலூன் குட்டிமனதைக் கட்டிப்போட்டிருந்தது உயர உயர எழும்பிய சிவப்பு தன்னையும் தூக்கிக்கொண்டுபோகும் என ஏங்கி ஆடியது குழந்தை சற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில் பிஞ்சு விரல்களின் பிடியிலிருந்து பிரிந்து … Continue reading

Posted in இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , , | 2 Comments

அந்தநாள் முதல்

முன்னாள் காதலி பின்னாள் காதலி இந்நாள் காதலி என்றெல்லாம் காதலில் வகைமையில்லை அப்படியே நேற்று இன்று நாளை என ஒவ்வொன்றாய் வந்துகொண்டிருந்தால் அது என்ன கண்றாவியோ ஆனால் காதலில்லை **

Posted in இலக்கியம், கவிதை, நகைச்சுவை, புனைவுகள் | Tagged , , | 1 Comment