ODI Cricket: இந்தியா-ஜிம்பாப்வே

வெஸ்ட் இண்டீஸோடான டி-20, ஒரு-நாள் தொடர்களை வென்றபின், இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஜிம்பாப்வேயில் 3 போட்டிகள் கொண்ட ஒரு-நாள் (50-ஓவர்) ஆட்டத் தொடருக்காக. முதல் மேட்ச் இன்று ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் ஆரம்பம்.

இந்திய அணிக்குத் தலைமை தாங்க முதலில் ஷிகர் தவன் அறிவிக்கப்பட்ட நிலையில், காயத்தில் இருந்த கே.எல்.ராஹுல் மீண்டதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவர்தான் கேப்டனாம். தவன் வைஸ்-கேப்டன்! ரோஹித் ஷர்மா காயமுற்றிருந்த நிலையில் கடந்த மாதங்களில் ரிஷப் பந்துக்கும், ஹார்திக் பாண்ட்யாவுக்கும்கூட கேப்டனாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அவர்களும் நன்றாகச் செய்தார்கள். புதிய வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதைவிடவும், கேப்டனாக நிறையப் பேருக்கு பயிற்சிகொடுக்கும் உலகின் ஒரே கிரிக்கெட் நிர்வாகம், இந்திய கிரிக்கெட் போர்டுதான்!

Sikandar Raza -leading allrounder, Zimbawe

3 போட்டிகள் நடக்கும் தொடர் அனேகமாக இந்தியாவின் பக்கம் எளிதாகச் சாயும் என்பது பலரின் கணிப்பு. காரணம் ஜிம்பாப்வே அணி சர்வதேச விளையாட்டு அனுபவம் மிகக் குறைவாகக் கொண்ட அணி என்பதோடு, அதன் முக்கிய ஆட்டக்காரர்கள் – கேப்டன் க்ரெய்க் எர்வின் (Craig Erwine), பேட்ஸ்மன் ஷான் வில்லியம்ஸ் ( Sean Williams), வேகப்பந்துவீச்சாளர்கள் ப்ளெஸ்ஸிங் முஸரபானி (Blessing Muzarabani), தெண்தாய் ச்சடாரா (Tendai Chatara) ஆகியோர் காயம் காரணமாக அணியில் இல்லை. அணியின் பெரிய பலம் சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிராக சாதித்துக் காண்பித்த ஆல்ரவுண்டர்/முன்னாள் கேப்டன் சிகந்தர் ரஸா மற்றும் இளம் பேட்ஸ்மன் இன்னசெண்ட் கையா (Innocent Kaia) ஆகியோர். ஜான் மஸாரா, ப்ராட் இவான்ஸ் (Brad Evans), விக்டர் ந்யாயுச்சி (Victor Nyauchi) போன்ற பந்துவீச்சாளர்களும் அணியில். அனுபவ வீரரான ரெஜிஸ் சகாப்வா (Regis Chakabwa) ஜிம்பாப்வேயின் கேப்டன். இவர் விக்கெட்கீப்பரும்கூட. ஜிம்பாப்வேயில் பெரிதும் மதிக்கப்படும் முன்னாள் வீரரான டேவ் ஹௌட்டன் (Dave Houghton) அணியின் புதிய கோச். இளம் அணிக்கு புதிய உத்வேகமும், தைர்யமும் தருபவர். சர்வதேச அனுபவம் இதுவரை கூடிவராத இளம்வீரர்கள் இவரிடம் ஆர்வமாக, ஆழமாகக் கற்றுக்கொண்டால், வலிமையான இந்தியாவுக்கெதிரான தொடர் சுவாரஸ்யமாகும். களைகட்டும்.

இந்திய அணியில் -மீண்டும் வாய்ப்பு கிடைத்திருப்பதால்-குறிப்பாக கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்: குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ப்ரஸித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர்.

Match starts @ 1245 hrs (IST). Live in Sony Network.

2 thoughts on “ODI Cricket: இந்தியா-ஜிம்பாப்வே

 1. மகன்கள் டீவியில் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஜிம்பாப்வே டீம் நபர்கள் பேயர்கள் எல்லாம் சொல்வதே ஆச்சர்யம்.  அவர்கள் திறமை பற்றியும் அலசி இருக்கிறீர்கள்!  பழைய ஜிம்பாப்வே டீம் பற்றிய நினைவு வருகிறது!

  Like

  1. @ ஸ்ரீராம்:

   டாப் 12 கிரிக்கெட் நாடுகளில், ஒவ்வொரு அணியையும் அவர்கள் எந்த அணிக்கெதிராக ஆடினாலும், கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். கடந்த சில மாதங்களில் நிறைய கிரிக்கெட் இருந்தும், ஏகப்பட்ட பயணம், சொந்த வேலை என பிஸியானதால் எழுத முடியவில்லை.

   இதை எழுதுகையில் 10-விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஜெயித்துள்ளது! ஆச்சர்யப்பட ஏதுமில்லை எனினும், 2,3 விக்கெட்டாவது சரியும் என எதிர்பார்த்தேன். ஜிம்பாப்வேயின் 9th wicket partnership ஆட்டம் ரசிக்கமுடிந்தது.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s