WPL 2023:  முதல் சேம்பியன் யார்? டெல்லியா? மும்பையா?

கடந்த நாலு வாரங்களாக இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் குஷிப்படுத்திவரும் பெண்களின் முதல் இந்திய டி-20 லீக் ஆன WPL (Women’s Premier League),   இறுதிக் கட்டத்தை வந்தடைந்திருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் பெண்கள் அணி, மும்பை இந்தியன்ஸ் மகளிர் குழாமுடன் WPL கோப்பைக்காக மோதத் தயாராய் உறுமிக்கொண்டு நிற்கிறது.

Meg Lanning (DC) & Harmanpreet Kaur (MI) posing with the WPL Cup

இதுவரை நடந்த சுவாரஸ்யமான போட்டிகளில் இந்த இரு அணிகள்தான் டாப்கிளாஸ் என்பதில் எந்த சந்தேகமும் எவருக்குமில்லை. மூன்றாவது இடத்தில் உ.பி.வாரியர்ஸ். 4,5 ஆவது இடங்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் ஜயண்ட்ஸ்! அணியின் பலம் என்று பார்த்தால் மும்பை இண்டியன்ஸ்தான் மனதில் முதலில் வருகிறது. டெல்லியும் சளைத்ததில்லை. முதலில் ஃபைனலில் நுழைந்த டீம் அதுதானே. உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டனான மெக் லானிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி அணியில் இந்தியாவுக்கு U-19 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த ஷெஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues), ஷிகா பாண்டே, மரிஸான் காப், அலைஸ் கேப்ஸி(Alice Capsey), ஜெஸ் ஜோனஸன் எனத் திறன்வாய்ந்த வீராங்கனைகள்.

Alice Capsey (centre) being congratulated for a wicket by Delhi Capitals’ girls.

இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமை தாங்கும் மும்பை இண்டியன்ஸில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மாத்யூஸ், WPL -ல் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய இஸ்ஸி வோங், முன்னேறிவரும் இந்திய  வீராங்கனை சைகா இஷாக் (Saika Ishaque), யஸ்திகா பாட்டியா (Yastika Bhatia), ஆல்ரவுண்டர்கள் அமேலியா கர் (Amelia Kerr), நாட் ஸிவர்-ப்ரண்ட் (Nat Sciver-Brunt),  ராதா யாதவ் போன்ற in-form players.

Hayley Mathews – Mumbai Indians’ opener

மும்பையின் ப்ராபர்ன் (Brabourne) ஸ்டேடியத்தில் மகளிர் கிரிக்கெட்டின் கடும்போட்டி ஒன்று நிகழவிருக்கிறது நாளை இரவு (26-3-23). மும்பையின் அந்தத் திகிலான இரவில், அழகுமிகு WPL கோப்பை யார் கைகளில் அமர்ந்து மின்னுமோ!

**

2 thoughts on “WPL 2023:  முதல் சேம்பியன் யார்? டெல்லியா? மும்பையா?

  1. ஓ…   இன்றிரவு இறுதி ஆட்டமா?  நான் இந்த வரிசையில் ஒரு ஆட்டம் கூட பார்க்கவில்லை.  இன்றும் பார்க்க முடியுமா, தெரியவில்லை.  தொலைக்காட்சிப்பெட்டி மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறது!

    Liked by 1 person

  2. நான் தொடர்ந்து பார்க்கிறேன். இன்று தில்லியின் கைகளில் கோப்பை செல்லும், மும்மை தன் உச்ச வெற்றியை சென்ற மேட்சில் காண்பித்துவிட்டார்கள் என்று தோன்றியது

    Liked by 1 person

Leave a comment