டி-20 உலகக்கோப்பை 2021

ஐபிஎல் முடிந்த சூட்டோடு சூடாக, அமீரகத்தில் ஆரம்பித்துவிட்டது இன்று (17-10-2021) டி-20 உலகக்கோப்பைக்கான போட்டிகள். ஓமனின் தலைநகரான மஸ்கட்டில் முதல் மேட்ச்சில் , ஓமன், பாப்புவா நியூ கினீயைத் தோற்கடித்துவிட்டது. இன்றைய இரண்டாவது போட்டியில் ஸ்காட்லாந்து, பங்களாதேஷை எதிர்த்து ஆடிவருகிறது.

ICC T-20 World Cup

உலகின்  டாப்-8 கிரிக்கெட் நாடுகளின் அணிகள் இரு பிரதான குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

Group-1 : இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா.

Group-2 : இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூஸிலாந்து.

இவை தவிர, மேலும் இரண்டு குழுக்கள் உண்டு – இப்படி:

Group A: ஸ்ரீலங்கா, நெதர்லாந்து, அயர்லாந்து, நமீபியா.

Group B: பங்களாதேஷ், ஸ்காட்லாந்து, ஓமன், பாப்புவா நியூ கினீ.

இந்தியா விளையாடும் உலகக்கோப்பையின் முதல் மேட்ச் 24/10/2021 (ஞாயிறு) துபாயில் நடக்கும். பரமவைரியான பாகிஸ்தானுடன் ஆட்டம். ரசிகர்களின் ஆட்டபாட்டங்களும் ரசமாக இருக்கும்! இப்படி ஐசிசி-யின் மெகா டூர்னமெண்ட்டுகளில் மட்டும், பாகிஸ்தான், இந்தியா மோதிக்கொள்வது வழக்கமாகிவிட்டிருக்கிறது, சமீப காலமாக. காகிதத்தில், கோஹ்லியின் இந்தியா, பாபர் ஆஸமின் பாகிஸ்தானைவிட (குறிப்பாக பேட்டிங்கில்) வலுவானதாகத் தெரிகிறது. டி-20 உலகில், எந்த நாளில் என்ன நடக்கும் எனச் சொல்லமுடியாது. ஞாயிறு வரட்டும், வந்து சொல்லட்டும் கதை!

டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோஹ்லி(கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக்கேப்டன்), கே.எல்.ராஹுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, ராஹுல் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஹர்தீக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி, ஷர்துல் டாக்குர்.  (டாக்குர், அக்ஷர் பட்டேலுக்குப் பதிலாகக் கடைசிகட்டத்தில் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். Fast bowling allrounder in form – என்பதால்.)

**

2 thoughts on “டி-20 உலகக்கோப்பை 2021

  1. பழைய பெருமை தக்கவைக்கப்படவேண்டும்!  பாபரை கோஹ்லியோடு ஒப்பிட்ட காலம் இருந்தது.  இப்போது அவர்கள் சர்வதேச கிரிக்கெட் ஆடியே நாட்களாகின்றன.

    Like

    1. @ SRIRAM : அப்படி ஒன்னும் நாளாகிவிடவில்லை. ஜனவரி 21-ல் தென்னாப்பிரிக்காவோடு பாகிஸ்தானில் டி-20 யும், இங்கிலாந்தோடு ஜூலை 21-லும் ஆடியிருக்கிறார்கள். கூடவே பாக் சூப்பர் லீக் ஆட்டங்கள் வேறு..

      Like

Leave a comment