கிரிக்கெட்: Rohit in ?

இன்றைய (16-3-21) மேட்ச்சில் (மற்றும் இனிவரும் போட்டிகளில்) ரசிகர்கள் அனுமதி இல்லை! நல்ல ஃபார்மில் இருக்கும் கோவிட்-2 எங்கும் வேகம் காட்டி விளையாடி வருவதால், பரவுகிறது அச்சம். ஐரோப்பிய நாடுகளில் ஆக்ஸ்ஃபர்ட்-ஆஸ்ட்ரா-ஸெனெகா தடுப்பூசியை உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கொண்டு அனுமதிப்பதா, நிறுத்திவிடுவதா? மிரட்டும் சைட்-எஃபெக்ட்ஸ்!

Offspinner Moeen Ali

சரி, கிரிக்கெட்! இன்றைய அஹமதாபாத் பிட்ச் ஸ்பின் எடுக்கும் எனப் பேச்சு. அப்படியானால் அவர்களுக்கு ஆஃப்ஸ்பின்னர் மோயீன் அலி உள்ளே.  தாக்கியும் பேட் செய்பவராயிற்றே. நம்ப பக்கத்தில் மாறுதல்? சுந்தர், சாஹல் நன்றாக வீசுகிறார்கள். தொடர்வார்கள். பட்டேல் வர வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. மிதவேகப் பந்துவீச்சும் சரியாகத்தான் செல்கிறது இந்தியாவுக்கு. துவக்க பேட்டிங்கில் திணறும் ராஹுல் இன்று,  தவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கவேண்டியிருக்கும். இந்தியா ரிஸ்க் எடுக்காது. ரோஹித் ஷர்மா உள்ளே வருவதே சரி. மற்றபடி மாறுதலுக்கு  வாய்ப்புக் குறைவு.

Rohit Sharma

போனதடவை டாஸ் ஜெயித்த கோஹ்லி, பலிபீடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இன்று ? டாஸ் வெல்லும் அணி, அஹமதாபாதில் இலக்கைத் துரத்தவே விரும்புகிறது. முதலில் இந்தியா பேட் செய்ய நேர்ந்தால், ஆர்ச்சர், வுட், கர்ரன் எனக் ’கவனிக்க’ வேண்டியிருக்கும். எளிதல்ல! மார்க் வுட் முதல் போட்டியில் 152 கி.மீ.யில் குறிவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். இந்திய மிடில்-ஆர்டரில் பாண்ட்யா, சூர்யகுமார் க்ளிக் ஆனால்… ஸ்கோர் தூள்பறக்கும்.

இரவு வரும், கதை தெரிந்துவிடும்..

**

4 thoughts on “கிரிக்கெட்: Rohit in ?

  1. rohit சில ஓவர்கள் தாக்குப்பிடித்தால் பி ன்நன்கு விளியாடலாம்

    Like

  2. இப்போதான் ஒரு கமெண்ட் பார்த்தேன். ராகுலுக்கு நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் ஷைன் பண்ண முடியாதுன்னு (ஹாஹா அரசியல் இல்லை). அப்படியே ஆகிவிட்டது. பாவம் கே எல் ராகுல். இனி வாய்ப்பு ரொம்பக் கடினம்.

    Liked by 1 person

  3. @ ஜி.எம்.பாலசுப்ரமணியம், @ ஸ்ரீராம், @ நெல்லைத்தமிழன் :

    டாஸ் காலியாகும், அதன்பின்னே மேட்ச் போகும் என்பது எதிர்பார்த்ததுதான். ராஹுலை பெஞ்சில் உட்காரவைத்துக் கொஞ்சம் காப்பாத்தி இருக்கலாம்…

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s