Asia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை ?


(Picture courtesy: Internet)

இரண்டு வாரக் கிரிக்கெட் டிராமா இன்று முடிவுக்கு வருகிறது துபாயில். இங்கிலாந்துக்குப்போய் சேம்பியன்ஸ் டிராஃபியை பாகிஸ்தானிடம் கோட்டைவிட்டது விராட் கோலியின் இந்தியா. இந்தமுறை ரோஹித்தின் தலைமையில் ஆசியக் கோப்பையை வெல்லுமா என்பதே உலகெங்குமுள்ள இந்திய ரசிகர்களின் சிந்தனை. இந்தத் தொடரில், பாகிஸ்தான் பங்களாதேஷினால் விரட்டப்பட்டுவிட்டது கொஞ்சம் நிம்மதி என்றாலும், பங்களாதேஷ் ஒருமாதிரியான டீம். உலகக்கோப்பையில்கூட நமக்கு சோதனையாக அமைந்துவிட்ட அணி. போட்டி கடுமையாகவே இருக்கும் இன்று. உஷார் இந்தியா!

பங்களாதேஷின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷகிப்-உல்-ஹசன் காயம் காரணமாக டாக்கா திரும்பிவிட்டது அதன் பலத்தைக் குறைத்திருக்கிறது என்பது உண்மை. அவர் தரத்தில் நிரப்ப, வேறு ஸ்பின்னர்கள் அணியில் இப்போதில்லை. 20-வயது இளம் சுழல் மெஹ்தி ஹாசன் மிராஸ் நன்றாக வீசுவதோடு, பேட்டிங்கும் செய்கிறார் என்பது ஒரு ப்ளஸ். பங்களாதேஷின் எதிர்கால ஆல்ரவுண்டராக பரிமளிக்கும் தகுதி அவரிடம் தெரிகிறது. பங்களாதேஷின் ஸ்பின் கோச்-ஆன, முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி இவர்மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார். இன்றைய ஆசியக்கோப்பை ஃபைனலில், இந்தியாவுக்கெதிராகத் தன்னை நிறுவிக்கொள்ள இந்த இளம் வீரரும் முனைவார்தான். பார்ட்-டைம் பௌலர்கள் சௌம்யா சர்க்கார் மற்றும் மொஹமதுல்லா அவ்வப்போது உபயோகப்படுத்தப்படலாம்.

முஷ்ஃபிகுர், முஸ்தாஃபிசுர் : பேட்டிங்கில் இந்திய பௌலர்கள் எவ்வளவு சீக்கிரம் முஷ்ஃபிகுர் ரஹீமைத் தூக்குகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. முஷ்ஃபிகுர் நின்று ஆடினால் இந்தியாவுக்குத் தலைவேதனையாகிவிடும். மஹ்மதுல்லாவும், இம்ருல் காயெஸ்-உம், மெஹ்தி ஹாசனும் மிடில்-ஆர்டரில் மேலும் ரன் சேர்த்துவிடுவார்கள்.

இந்திய பேட்டிங்மீது முக்கிய தாக்குதல், பாகிஸ்தான் வெளியேற்றத்துக்குக் காரணமான வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானிடமிருந்துதான் இருக்கும். மற்ற இரண்டு மீடியம்-பேஸர்களான கேப்டன் மஷ்ரஃபே மொர்தாஸாவும், ருபெல் ஹுசைனும் சப்போர்ட்டிங் ரோல்தான் செய்வார்கள்.

ஷிகர் தவணின் மட்டைவீச்சு இன்று எடுபடுமா ? நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய துவக்க ஆட்டக்காரர்களை பங்களாதேஷ் எளிதில் வீழ்த்திவிட்டால், அம்பத்தி ராயுடு, தோனி, கார்த்திக் ஆகியோரின் தலைமீது குண்டுபோல் வந்து விழும் பொறுப்பு. விவேகமாக ஆடி நிலைமையை சமாளிக்கவேண்டியிருக்கும். அதுதானே அவர்களது வேலையும். (தினேஷ் கார்த்திக் மிடில் ஆர்டரில் இன்று இருப்பார் என நம்புவோம்.) கீழ்நிலை பேட்ஸ்மன்களான கேதார் ஜாதவுக்கும், ரவீந்திர ஜடேஜாவுக்கும் அப்படி ஒரு எமர்ஜென்சிநிலையை எதிர்கொள்ளும் திறன் உண்டு.

பும்ரா, புவனேஷ்வர், சஹல் ஆகியோர் இன்று இந்திய பௌலிங் டூட்டிக்குத் திரும்புவார்கள். சூப்பர்-4 போட்டியில் பங்களாதேஷின் 4 விக்கெட்டுகளை சாய்த்த ஜடேஜாவும், ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவும் பங்களாதேஷை இன்று பிரித்து மேய்வதற்கு, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கைகொடுப்பார்கள் எனலாம்.

என்ன சொல்லப்போகிறது இன்று துபாய்? கோப்பை இந்தியாவுக்குத்தானே?

*

8 thoughts on “Asia Cup: வெல்லுமா இந்தியா கோப்பையை ?

  1. பாருங்க…. சந்தேகப்படவைக்கிறாங்க, வலிமை குறைந்தாலும், பங்களாதேஷ். ஆனால் பொதுவா அவங்களோட பிஹேவியர் ப்ரொஃபஷனலாக இல்லை.

    Liked by 1 person

    1. @நெல்லைத்தமிழன் :
      ப்ரொஃபஷனல் பிஹேவியர்? சான்ஸே இல்லை. ஜெயித்தால் நாகின் டான்ஸையும் பார்க்கலாம்!

      Like

  2. நாளைக்காலை செய்தித்தாள் பார்த்தால் தெரிந்து விடும். அல்லது என் மகனுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பாரத்தால் தெரிந்துவிடும்!!

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:
      ஆமாமாம். ஃபேஸ்புக், ட்விட்டர்களில் கமெண்ட்ஸ் பாயும். கொஞ்சம் தூக்கம் விழித்தால் அர்த்த ராத்திரியிலேயே விடுகதைக்கு விடை கிடைத்துவிடும்!

      Like

    1. @Balasubramaniam G.M : இந்தமாதிரி சமயங்களில் நியூட்டனின் லாவும் நினைவுக்கு வரலாம்!

      Like

Leave a comment