And, quiet rolls the day

Good morning Good morning
Called whatsapp all along screaming
Good or bad
Worst or the very best
Morning is just morning
Though you may still be yawning
It doesn’t speak of any warning
Of anything that might come calling
During the course of the day..
Meanwhile, have a great day !

*

17 thoughts on “And, quiet rolls the day

  1. ஆஆஆஆவ்வ் இலக்கியக்:) கவித கவித… நன்று.

    சில பொழுதுகள் மிக ஸ்பெஷலாகவும்.. சில பாட் ஆகவும் இருப்பதும் உண்டுதான் நம் மூட்டைப் பொறுத்து:)…. எதுவாயினும் அது தானாகப் போய்க் கொண்டிருக்கு நாம் தான் நல்லது கெட்டது எனப் பிரிச்சுச் சொல்கிறோம் சில பொழுதுகளை:)

    Liked by 1 person

  2. இன்றைய பொழுது நல்லபடியாக போக வேண்டும் என்று எழுவார்கள் சிலர், இரவு படுக்க போகும் போது இன்றைய பொழுது நன்றாக போனது நன்றி இறைவா என்பார்கள்.

    சில நாள் நமக்கு உற்சாகமாய், சில நாள் மனவருத்தமாயும், இருக்கே!
    அதிரா சொல்வது போல் எல்லா நாளும் ஒன்றுதான் ஞானிகளுக்கு.நாம்தான் பிரித்துப் பார்க்கிறோம்.அஞ்ஞானி.

    Liked by 1 person

    1. //அதிரா சொல்வது போல் எல்லா நாளும் ஒன்றுதான் ஞானிகளுக்கு.///

      ஹா ஹா ஹா கோமதி அக்கா..
      ஏகாந்தன் அண்ணனை ஞானியாக்க முடியல்லியே எம்மால:)).. ஞானி ஆக்க வாணாம் அட்லீஸ்ட் அந்த ரிமூட்டைக் கூடப் பிடுங்க முடியல்ல அவர் காண்ட் ல இருந்து:))

      Liked by 1 person

      1. @ அதிரா:

        இப்போதான் , ஸ்பெயினை ரஷ்யாவிலிருந்து வெளியே விரட்டிவிட்டு வருகிறேன்.. அஞ்ஞானம்தான் காரணம்!

        Like

    2. @ கோமதி அரசு:
      //சில நாள் நமக்கு உற்சாகமாய், சில நாள் மனவருத்தமாயும், இருக்கே!//
      பின்னே, எல்லா நாளும் ஒரே மாதிரி இருந்தால் என்ன ஆகும் சொல்லுங்கள்!
      அதிராவுக்கு எதையும் சரியாகச் சொல்லித் தப்பிவிடுவடுவது வழக்கம்!

      Like

  3. நாளைப் பொழுதைப் பிச்சைக்காரனுக்கு என்று சொல்வார்கள் எங்கவீடுகளிலே. ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த பிச்சை என்னும்பொருளிலே!

    Liked by 1 person

      1. @ Geetha Sambasivam :

        ஞாபகம் வருதே! சின்ன வயதில் நான் ஏதாவது, குறிப்பாக ராத்திரி நேரத்தில் கேட்டால், நாளைக்கு வாங்கிக்கொள்ளலாம் என்கிற பொருளில், ‘பொழச்சிருந்தா பிச்சக்காரனுக்கு!’ என்பார். பொழச்சிருந்தா பிச்சக்காரனுக்கா? அப்ப நான்..? என்று குழம்பிய இரவில் தூங்கியதுண்டு.

        Like

      2. @Geetha Sambasivam : என் பதிலில் ‘என்பார் என் அம்மா!’ என வந்திருக்கவேண்டும்.

        Like

  4. துளசிதரன்: ஆங்கிலத்தில் அழகாக கவிதை எழுதுகிறீர்களே ஸார். நல்ல கருத்துள்ள கவிதை.

    கீதா: இறைவன் தரும் எந்த ஒரு சிறு நொடியும் நல்ல நொடியே. அதை குட் ஆகவோ பேட் ஆகவோ மாற்றுவது, மாறுவது நம் எண்ணங்களினால், செயல்களினால், நம் அட்டிட்யூடினால்தான். இல்லையா அண்ணா!? இந்த நாள் இனியநாள் என்று பாசிட்டிவாகத் தொடங்கட்டுமே!! என்ன நடந்தாலும் விலகி நின்று தாமரை இலைமேல் நீர் போல இருந்துவிட முயற்சிதான் ஆனால்….நாம் என்ன அதிராவை போல ஞானியா என்ன….அஞ்ஞானிகளே! என்னைச் சொன்னேன்!! ஹா ஹா ஹா

    Like

  5. @ துளசிதரன், @ கீதா:

    அவ்வப்போது சிந்தனை ஆங்கிலத்தில் செல்கையில், குறித்துவைத்த வரிகளைக் கவிதையாக்கியதுண்டு. 2014, 15 -ல் சில கவிதைகளை இதே ப்ளாகில் எழுதியிருக்கிறேன். காணாமற்போன மலேஷிய விமானம்பற்றியும் வரும் ஒரு சிறு கவிதை. சில டாக்குமெண்ட் ஃபைலில் தூங்குகின்றன அடுப்பங்கரைப் பூனைக்குட்டிகள் போல. நான் எழுதியதை ப்ளாகில் போட எனக்கே சோம்பல்!

    @கீதா: பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் நாம், பொழுது நம்மில் எதை விட்டுச் சென்றுள்ளது என்பதைப் பார்ப்பதில்லை. வேறு எதையாவது பராக்குப் பார்த்தேப் பொழுதுப்போக்குவது நம் பழக்கம்! இருந்தும், இடையிடையே பாஸிட்டிவ், நெகட்டிவ் என அங்கலாய்த்தல்!

    Like

Leave a comment