ஞானம் in a nutshell !

நமஸ்காரம் சார்.. பாத்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப பிஸியா?

சும்மா இருப்பதே சுகம்..

ஹி.. ஹி.. அது சரி. அதுக்காக ஒன்னுமே செய்யாம…

மனிதனிடம் இருந்தே குரங்கு பிறந்தது.

சார்..சார்.. கொஞ்சம் நில்லுங்க… நீங்க ஏதோ  தப்பா…

குரங்கின் கையில் கிடைத்த பூமாலைதான் உங்களோட வாழ்க்கை..

இது கொஞ்சம் சரியாத்தான் படறது..

நீங்கள் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறீர்கள். அவரோ.. உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஆ… அப்படியா!

மாட்டுக்கறி தின்றால் கடவுள் கண்ணுக்குத் தெரியமாட்டாரா?

சார்.. எங்கே  வர்றீங்க..  அதுக்காக மாட்டைக் கொன்னு மாங்குமாங்குன்னு தின்னுப்புட்டு, சாமி, பூதம்னா .. எப்படிக் கண்ணுக்குத் தெரியும்?

துறவிகள் எல்லாம் உடனே வீடு திரும்பவேண்டும்.

ஏன் சார்?

கடவுள் இல்லை.

சார்! எதையாவது தின்னுக்கோங்க… அதுக்காக இப்படில்லாம் அநியாயமா..

உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் கடவுளைத் தூக்கிக் குப்பையிலே எறிந்துவிடுங்கள்..

ஐயய்யோ ! அப்பறம் எங்க கதி?

பரலோக சாம்ராஜ்ஜியம் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஓஹோ..! பித்து முத்தியிருந்தாலும் பரவாயில்ல. பிள்ளையாரு பாத்துக்குவாரு. உள்ளே வாங்க.  கணேஷ் மந்திர் வந்துட்டோம். சூடா, நல்ல பிரசாதம் கெடைக்கும். வாங்கி, கொஞ்சம் வாயில போட்டீங்கன்னா.. தெளிஞ்சிரும்…

**

4 thoughts on “ஞானம் in a nutshell !

  1. இது சோமாலியாவில் படித்த பாடமா?

    Like

  2. ஓஹோ இப்படித்தான் மூக்கைத் தொடுகிறார்களா! நல்லா சுத்தறாங்கப்பா😃

    Liked by 1 person

    1. @ ரேவதி நரஸிம்ஹன்:

      முடிவதற்குள், கதை முடிவதற்குள், மூக்கையாவது சுத்திவருவோமே என்று பார்க்கிறார்களோ !

      Like

Leave a comment