நல்ல மனுஷன்

 

 

 

மறந்துவிட்ட சாமான் திடீரென

மனதிடுக்கிலே கிடுகிடுக்க

பழக்கமில்லாப் புதுக்கடையின்

வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா

சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு

பெரிய நோட்டைக் கொடுக்கப் பயந்தார்

சிடுசிடுக்காமல் வாங்கிக்கொண்டு

சின்னச்சின்ன நோட்டாக கடைக்காரன்

பாக்கியைக் கொடுத்துவிட்டானே

வாங்கி பர்ஸில் வைத்துக்கொண்டு

வழியெல்லாம் நினைத்துவந்தார்..

வில்லனாய் ஒவ்வொரு பயலும் இருக்க

நல்லவிதமா இருக்கானே மனுஷன்

இங்கதான் வாங்கணும் சாமான்.. இனிமே

வீட்டில் பர்ஸைக் குடைந்த

சுட்டிப்பேரன் சிடுசிடுத்தான்

கண்ணாடி போட்டுண்டு வெளியே போன்னு

எத்தன தடவதான் சொல்றது

கொடுத்திருக்கான் பாரு ஒனக்குன்னு!

அவன் தூக்கிக்காட்டிய விரலிடுக்கில்

அம்பது ரூபாக் கிழிசல் ஒன்று

அலட்சியமாய்ச் சிரித்துவைத்தது

 

-ஏகாந்தன்

**

9 thoughts on “நல்ல மனுஷன்

  1. பேரனே போயிருந்தாலும் இம்மாதிரி நோட்டுக்களை எப்படியேனும் நம்மிடம் தள்ளி விடுவார்கள். ஆகவே இதில் தாத்தாவின் தவறு ஏதும் இல்லை.

    Liked by 1 person

    1. @ கீதா சாம்பசிவம்: கடைக்காரனும் தாத்தா ஆவான்தான் ஒரு நாள்!

      Like

  2. உதவி செய்வது போலவே தங்கள் வேலைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வியாபாரிகள்…   நல்லவேளை..   கிழிசல்தானே?  கள்ளநோட்டு கொடுக்காமல் இருந்தார்களே!!!  பாஸிட்டிவ்!

    Liked by 1 person

    1. @ ஸ்ரீராம்:
      கள்ளநோட்டு ! அடடா, எதையெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது கள்ளமிகு உலகில்..

      Like

    2. //நல்லவேளை.. கிழிசல்தானே? கள்ளநோட்டு கொடுக்காமல் இருந்தார்களே!!! பாஸிட்டிவ்!//
      இதைத்தான் நானும் சொல்ல வந்தேன், :))

      Like

  3. காலையிலேயே கதையை வாசித்து விட்டேன்…
    அலுவலக கணினியில் தமிழ் எழுத்துரு பதிவதற்கு மறுக்கின்றது..
    ஆகக் கூடிய தொழில் நுட்பம் எல்லாம் தெரியாது!…

    கவிதை நாடகமாக மனதைத் தொட்டது கதை…
    எப்படியெல்லாம் ஏமாற்றுகின்றார்கள்…

    ஆனாலும் அந்தக் கடைக்காரனுக்கு ஒரு வில்லன் வராமலா போவான்!…

    Liked by 1 person

    1. @ துரை செல்வராஜு:

      துரை சார், வாங்க!
      கடைக்காரனுக்கும் வருவான் வில்லன்.. வில்லன்களை நேரப்படி, கிரமப்படி டிஸ்ட்ரிபியூட் பண்ணிடுவாரு ஆண்டவன் !

      Like

  4. ஆனாலும் ஏ அண்ணன் கிரிக்கெட் பார்த்தாலும், கவிதையும் ஜூப்பரா வருது உங்களுக்கு.. கீப் இற் மேலே:)).. உண்மையாகத்தான்.

    Liked by 1 person

    1. @ அதிரா :

      இன்னிக்கு கிரிக்கெட் இருக்கு சாயந்திரம்.. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி ! (ஆனா, மைதானத்துல மழை பெய்யாம இருக்கணுமே, வைரவா!)

      Like

Leave a comment