ஒன்றுமில்லை . .

சொந்தபந்தங்களில் யாரும்

என்னைச் சரியாகப் புரிந்துகொண்டவரில்லை

வெகுகாலமாய் அங்கலாய்த்துக்கொண்டிருந்த மனது

திடீரென ஒருநாள் தயங்கி நிறுத்தியது

மௌனவெளியில் கொஞ்சம் நடந்தபின்

இப்படி ஆரம்பித்தது :

உண்மையில் யார் அவர்கள்

எனக்குப் புரிகிறார்களா

தெரியவில்லை

என்னைச் சுற்றி அவர்களும்

அவர்களைச் சுற்றி  நானும்

அவ்வப்போது உலவி வருகிறோம்

அவ்வளவே ..

**

 

18 thoughts on “ஒன்றுமில்லை . .

    1. @ ராமானுஜம், காங்கோ:

      வருக! வாசித்ததற்கும் கருத்துக்கும் நன்றி.

      Like

  1. கவிதையை ரசித்தேன்.

    //என்னைச் சரியாகப் புரிந்துகொண்டவரில்லை//

    யாரையும் யாரும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது
    இரண்டாவது, நாம எல்லோரும் தனித் தனி மனிதர்கள்தாம். உடல், ரத்த, நட்புத் தொடர்புகள் இருக்கலாம். இருந்தாலும் நாம் தனித் தனிதான். நாம் நமது செயல்களாலேயே எடைபோடப்படுவோம் (இங்கயும், இறப்பின் பிறகும்… எப்படித் தெரியும்னு கேட்கப்படாது..சொல்லிட்டேன்)

    Liked by 1 person

    1. @ நெல்லைத் தமிழன்:
      //..நாம் தனித் தனிதான்..//

      இதனைத் தான் சொல்ல விழைகிறது கவிதை…

      Like

  2. நாம் யாரையும் புரிந்து கொள்ள முயற்சிக்காதபோது, நம்மை மட்டும் மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்! மேலும் நெல்லை சொல்வதுபோல தாயும் பிள்ளையுமே ஆனாலும் வாயும் வயிறும் வேறுதானே!

    Liked by 1 person

  3. ஒன்னுமில்லை….ஏகாந்தன் அண்ணா ஏதோ ஒன்றுமில்லைனு சொல்லிருக்காரே எட்டிப் பார்த்துட்டுப் போலாம்னு வந்தா ஒன்றுமில்லைனு சொல்லிட்டு அதுல பெரிய தத்துவத்தையே பொதிந்து வைச்சுட்டீங்களே!

    ஆமாம் ஒன்றுமில்லைதான்…..சொந்தம் பந்தம் எல்லாமே தாமரை இலைத் தண்ணீர்தானே என்று பார்க்கும் போது ஒன்றுமில்லைதான். நாம் தனிதான். இப்போது இருக்கும் சொந்த பந்தம் எல்லாம் இருந்தாலும் இல்லாமல் ஆகி தனிமைக்குச் சொந்தமாகும் காலமும் வரலாம். எல்லோரும் இருந்தாலும் தனிதான் இல்லை என்றாலும் தனிதான்…

    இதோ உங்க தத்துவத்தை வாசித்துக் கருத்து போட்டுக் கொண்டிருக்கும் போது இதோ என் அருகில் என் முகத்தையே பார்த்துக் கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு என் கண்ணழகி! நான் இருக்கிறேனே உனக்கு என்று என் கையில் ஒரு முத்தம் !!
    அடி கண்ணழகி உன்னை தனியா விடமாட்டேன்…இருக்கேனடி உனக்கு நான் அப்படினு இந்த உலகியலை அதனிடம் பேசினேன்…..அது என்ன என்று என்னைப் பார்த்தது….ஒன்றுமில்லை என்றேன்! அதற்கும் புரிந்திருக்குமோ தத்துவம்?!!

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:

      அடடா, என்ன ஒரு கமெண்ட்.. கண்ணழகி வேறு வந்துவிட்டதே, கதகதப்பாய் முத்தம் தர.. கருத்தைப் பகிர்ந்துகொள்ள!

      ம்.. ஒவ்வொருவரும் ஒரு உலகந்தான்.. ஆதலால் தனி உலகம். ஏகப்பட்ட உலகங்கள். இருந்தும் தவிர்க்கவியலா தனிமை. வேறு மார்க்கமில்லை..

      Like

  4. நல்ல தத்துவம். நாம் நம்மையே முதலில் புரிஞ்சுக்காதபோது தன்னை அறியாமல் இருக்கும்போது மற்றவர் எப்படி அறிந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கலாம்?

    Liked by 1 person

    1. “தன்னை அறிந்தவர்க்கு தானாய் இனிப்பவனே என்னை அறிந்துகொண்டேன் மன்னனே எனக்கும் கீதை எடுத்துரைத்த கண்ணனே ”

      என்கிற வாலிவரிகள் நினைவுக்கு வருகின்றன.

      Liked by 1 person

      1. @ ஸ்ரீராம்:
        இப்படி வாலி எழுதியிருப்பதை இப்போதுதான் அறிகிறேன். வாலியின் திரைப்பாடல்களைத் தாண்டிய படைப்புகளைக் கொஞ்சம் படிக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.

        Like

    2. @ கீதா சாம்பசிவம்:
      இது ஒரு எதிர்பார்ப்பு எனச் சொல்ல முடியாது. Expecting everyone to understand oneself, would be futile..sometimes foolhardy.. இருந்தும் நம்மை புரிந்துகொண்டவர் நம் வட்டத்தில் யாருமில்லை என்பதில் ஒரு அலுப்பு இருக்கிறது.. a frustration there…

      அடுத்ததாக, நம்மை நாமே புரிந்துகொள்ளல் என்பது வேற லெவல்..!

      Like

Leave a reply to Ramanujam Congo Cancel reply