அம்பை சிறப்பிதழாக ‘சொல்வனம்’

 

இணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.

     தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.  அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன. 

இதழ் முகவரி : solvanam.com.  அன்பர்கள் வாசித்து மகிழலாம்.

இதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

**

9 thoughts on “அம்பை சிறப்பிதழாக ‘சொல்வனம்’

  1. அம்பை எழுதியவற்றில் “அந்திமாலை” தவிர்த்து வேறே படித்த நினைவு இல்லை. ஆனால் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர் என்பது தெரியும்.

    Like

    1. @ கீதா சாம்பசிவம் : ஓ, அந்திமாலை படித்திருக்கிறீர்களா? மேலும் தேடினால் நெட்டில் படிக்கலாம்.

      Like

    1. @ ஸ்ரீராம்: உங்களது கலெக்‌ஷனில் அம்பை இல்லாதது ஆச்சரியம்!

      Like

  2. பானுக்கா எனக்கு அம்பையின் கதைத் தொகுப்பு கொடுத்திருந்தாங்க. சிறுகதைத் தொகுப்பு.

    வாசித்தேன். மிக வித்தியாசமான எழுத்து. பிற பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்ட எழுத்து. பெண்கள் ரொம்பவே சுதந்திரம் பெற்ற மிகவுமே முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்களாக …இன்னும் சொல்லலாம்…அவரை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு அறிவோ எழுத்து அனுபவமோ இல்லாததால் நான் வேறு சொல்லவில்லை ஏகாந்தன் அண்ணா.
    சொல்வனத்தில் பார்க்கிறேன்

    கீதா

    Like

    1. @ கீதா:
      நீங்கள் ஏற்கனவே ஒரு தொகுப்பு படித்திருப்பதால், அந்தப் பின்னணியோடு சொல்வனக் கட்டுரைகளை வாசிக்கலாம். வித்தியாசமான எழுத்துக்களைத் தேடிச் செல்வது நம் வாசிப்பனுபவத்தை மேம்படுத்தும்.

      Like

    1. @ GM Balasubramaniam :

      அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லக்ஷ்மி. கோயம்புத்தூரில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்தவர். டெல்லியின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான JNU -ல் டாக்டர் பட்டம் பெற்றவர். இப்போது வசிப்பது மும்பையில் என்று நினைக்கிறேன்.
      ஆங்கிலத்தில் டாக்டர் சி.எஸ்.லக்ஷ்மி என்கிற பெயரில் பத்திகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

      Like

Leave a comment