நினைந்து நினைந்து நெஞ்சம் . . !

நேற்றைய கவிதையின் (அந்தம்) தாக்கம் தொடர,
மேலும் ஒன்று கீழே முளைப்பது தவிர்க்கமுடியாததாகிறது !

ப்ராப்தம்

வெந்ததா .. வேகாததா ..
வெம்மையே போதாததா
என்னதான் சிந்தையோ
வாழ்வெனும் சந்தையோ
முதுகிலே ஆசையின்
முடிவிலா சவாரியோ
முதுமையின் கனவினில்
முறுவலிக்கும் விதியினில்
முக்தியென்றும் மோட்சமென்றும்
மோகம் கூட்டும் வேகமோ?

வெந்ததா.. வேகாததா ..
வெம்மையே போதாததா ?

**

15 thoughts on “நினைந்து நினைந்து நெஞ்சம் . . !

  1. அட அந்தத்தின் தொடர்ச்சியும் நன்றாகவே இருக்கிறதே!! சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்பது போலும் கொள்ளலாமோ?!!!
    அந்தத்தைக் காட்டிலும் அதன் தொடர்ச்சி பிராப்தம் கொஞ்சம் எளிதாகவே புரிகிறது போல் தோன்றுகிறது! ப்ராப்தம்!!!

    நல்ல சந்தம்!!

    கீதா

    Like

  2. அட அந்தத்தின் தொடர்ச்சியும் நன்றாகவே இருக்கிறதே!! சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்பது போலும் கொள்ளலாமோ?!!!
    அந்தத்தைக் காட்டிலும் அதன் தொடர்ச்சி பிராப்தம் கொஞ்சம் எளிதாகவே புரிகிறது போல் தோன்றுகிறது! ப்ராப்தம்!!!

    சந்தம் அழகாக இருக்கு…

    எனக்கொரு பழக்கம். கவிதையைக் கொஞ்சம் தாளம் போட்டுச் சொல்லிப் பார்பப்து வழக்கம். அப்படிப் பார்த்த்தில்…

    கீதா

    Like

  3. முதலில் வேர்ட்ப்ரெஸ் கோபித்துக் கொண்டுவிட்டது. நீ ட்யூப்ளிக்கேட் என்று….பின்னர் கொஞ்சம் மாற்றி விட்டுப் போட முயன்றால் உனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றது. சரி வெளியில் போய்விட்டு மீண்டும் உள்ளே வந்தால் முதலில் போட்டது வெயிட்டிங்க் ஃபார் மாடரேஷன் என்றது. ஒரு வேளை வரலைனா என்று மீண்டும் மாற்றியதையும் போட்டுள்ளேன்….அதனால் 2

    கீதா

    Like

  4. @கீதா:
    உங்களிடம் இப்படி விளையாட வர்ட்ப்ரெஸுக்குப் பிடிக்கிறது போலும். முதலில் அனுமதி மறுப்பென்கும், பிறகு எல்லாவற்றையும் சேர்த்துக் கதவைத்திறந்துவிட்டுவிடும். அதன் குணாதிசயம் அப்படி!

    சந்தத்தோடு அது சத்தமெழுப்பியதால்தான் .. ஏட்டில் எழுதி வைத்தேன்..!

    Like

    1. ஹா ஹா ஹா ஆமாம் வேர்ட் ப்ரெஸ்ஸும் நானும் ஹைட் அண்ட் சீக் விளையாட்டு!!! ஆமாம் அதன் குணாதிசயம் வித்தியாசமாகவே இருக்கு

      கீதா

      Liked by 1 person

  5. சந்தத்துக்காக வேண்டாத வார்த்தை சங்கதிகள் ஒரு அப்ஸ்ட்ராக்ட் எண்ணத்தை தோற்றுவிக்கிறது ஏதோ தோன்றியது சொன்னேன்

    Like

  6. @ Balasubramaniam G.M :

    வேண்டாத வார்த்தை சங்கதிகள்?

    இந்தக் கவிதை சந்தத்தில் அமைந்திருக்கிறது. உண்மை. ஆனால் சந்தத்தை சொந்தம் கொண்டாடி, ஏதேதோ எழுதிச் செல்பவன் நானல்ல. அர்த்தமில்லாமல் எந்த வார்த்தையும் என்னிடமிருந்து வர, அதுவும் கவிதையாக வர, வாய்ப்பில்லை.

    Like

  7. அவ்வுலகம் செல்ல இருக்கிறது ஆசைகள் ஆயிரம். ஆனாலும் தடுக்கிறது முதுகில் சுமக்கும் கர்மவினையின் தீவிரம்.

    முக்தி என்ன, மோட்சம் என்ன? எது கிடைக்குமோ? சக்தி இல்லை விதியின் சிரிப்பை ரசிக்க !

    Liked by 1 person

    1. @ஸ்ரீராம்:
      சுஜாதா சொன்னதுபோல் மென்கவிதைகள்!
      ஏனோ நினைவுக்கு வருகிறது இப்போது இந்தப் பாட்டு: சிரித்தாலும் கண்ணீர் வரும்..அழுதாலும் கண்ணீர் வரும்..
      கடவுள் இந்த இரண்டு உணர்வுகளையும் கண்ணீர்வழி காட்டுமாறு ஏன் வைத்தாரோ?

      வெந்ததா..வேகாததா.. என்று நீங்கள் முதல்கவிதைக்கான பின்னூட்டத்தில் நேற்று குறிப்பிட்டது என்னுள் ஒரு பாடலைக் கிளப்பியது: ரவிச்சந்திரன், கேஆர்வி யின் நினைவில் நிறைந்தவள் படத்தில் வரும் ‘தொட்டதா.. தொடாததா.. தென்றலே படாததா..’
      நினைவுக்கு வருகிறதா இந்தப் பாட்டின் டியூன்..?

      Like

  8. ஆதங்கத்தையும், ஏக்கத்தையும் உணரமுடிகிறது.

    Liked by 1 person

  9. தொடர் கவிதை? நன்றாகவே இருக்கிறது. ஆனால் கவிதை இலக்கணம் எல்லாம் தெரியாது. கவிஞர்களைப் பார்த்து ஆச்சரியப்பட மட்டும் தெரியும்.

    Liked by 1 person

  10. @Geetha Sambasivam :

    வாங்க கீதாஜி வாங்க!

    அவ்வப்போது சிறு வசன கவிதைகள் எழுதுவது நெடுங்கால வழக்கம். சிலது சந்தத்துடன் வரும். சிலது எதனோடும் சொந்தம் கொண்டாடாது!

    Like

Leave a comment