அடியேனால் எழுதப்பட்ட இரண்டு தமிழ் மின்னூல்கள் ‘அமேஸானில்’ வெளியிடப்பட்டுள்ளன :
- ஆதிசங்கரர் ராமானுஜர் வேதாந்த தேசிகர்
(அமேஸான் Link: B08DMWV29J )
மேற்கண்ட ஹிந்துமத ஞானிகள் வாழ்ந்த காலகட்டம், நிகழ்வுகள், சமயப்பணி, படைப்புகள்பற்றி சுருக்கமாக, சுவாரஸ்யமாகச் சொல்லும் கட்டுரைத் தொகுப்பு.
- தூரத்திலிருந்து ஒரு குரல்
(அமேஸான் Link: B08F566L57 )
இந்தியா என்கிற மாபெரும் தேசத்தில் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், நிகழ்வுகள் இவற்றோடு, கலாம், காந்தி, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என வேகமாகக் காட்டிச் செல்லும் கட்டுரைகள். பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் எனவும் ஆங்காங்கே காட்சிகள் இருக்கும். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் அங்கதம் !
இரண்டு நூல்களையும், ’அமேஸான் அக்கவுண்ட்’ உள்ள அன்பர்கள் ’இலவச Kindle App’-ஐத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ படிக்கலாம். Kindle Unlimited membership -உள்ளவர்கள் இலவசமாகப் படிக்கலாம். மற்ற அன்பர்கள் விலை கொடுத்து வாசிக்கவேண்டியிருக்கும்!
வாசக, வாசகியரை வரவேற்கிறேன் அன்புடன்.
–ஏகாந்தன்