மழை

வாராது நீ இருந்துவிட்டால்
வாடி வதங்கி நிற்பார்
வறட்சி என அரற்றிடுவார்
அடித்துப் பெய்தாலோ
இப்படியா ஒரேயடியா
பெய்து தொலைக்கணும்
எப்போது நிற்குமோ இந்த சனியன்
எள்ளளவும் இரக்கமின்றி
ஏடாகூடமாய்ப் பேசிடுவார்
அடிக்கடிப் பார்த்திடுவார் விண்ணை
விடாது நொந்துகொள்வார் உன்னை
புத்தி இவர்களுக்குக் கொஞ்சம் மொண்ணை !

-ஏகாந்தன்
(மேற்கண்ட கவிதை, 12-10-15-ஆம் தேதியிட்ட தினமணி இதழில் வெளிவந்தது. நன்றி: தினமணி)