Tag Archives: யுவராஜ் சிங்

க்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ !

ஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது. முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , | Leave a comment

கோஹ்லியின் கீழ் தோனி !

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில். இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , | 1 Comment

ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சேம்பியன்

ஐபிஎல் 2016-ன் இறுதிப்போட்டியில் (பெங்களூர், 29 மே, 2016) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இறுதிப்போட்டியில் பங்குகொண்ட இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை :அவற்றின் கேப்டன்களான விராட் கோஹ்லியும், டேவிட் வார்னரும் (David Warner) துவக்க ஆட்டக்காரர்கள். தங்கள் அணிக்கு சிறப்பாக துவக்கம் தந்த அதிரடி … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , | 1 Comment

கிரிக்கெட் உலகக்கோப்பை : இந்தியா-நியூஸிலாந்து ஒரு முன்னோட்டம்

இந்தியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் ஜூனியர் டீம்களின் தகுதிச்சுற்று முடிவடைந்துவிட்டது. சூப்பர் 10 எனப்படும் டாப்-10 பங்கேற்கும் போட்டிகள் நாளை (15-3-2016) துவங்குகிறது. முதல் போட்டி இந்தியா நியூஸிலாந்துக்கிடையே நாக்பூரில் நடக்கிறது. கடந்த ஒரு வருடத்தில், இந்திய டி-20 அணியின் வெற்றிகளில் – ஆஸ்திரேலியாவை அவர்களின் மண்ணிலேயே கிழித்துப்போட்டது, ஆசியகோப்பையை பங்களாதேஷில் வென்றது – … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், விளையாட்டு | Tagged , , , , , , , , , , | Leave a comment

டி-20: இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு அப்பால்..

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசியகோப்பை டி-20 போட்டிகளில் நேற்றைய போட்டியையும் சேர்த்து 4 தொடர்வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. வீழ்த்தப்பட்ட அணிகளில் பாகிஸ்தான், ஸ்ரீலங்காவும் அடங்கும். மார்ச் 6-ம் தேதி ஆடப்படவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா பங்களாதேஷோடு மோதவிருக்கிறது. இதுவரை இந்தியாவின் ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்தோருக்கு சில விஷயங்கள் பளிச்செனப் பட்டிருக்கும். அவற்றில் முதன்மையானது விராட் கோஹ்லியின் ப்ரமாத ஃபார்ம். … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , , , | Leave a comment

டி-20 ஆசியகோப்பை: பாகிஸ்தானைக் கசக்கிப் பிழிந்த இந்தியா

பங்களாதேஷின் மீர்பூரில் நேற்று (27-2-2016) நடந்த ஆசியக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா. `இந்தியா-பாகிஸ்தான் க்ளாசிக்` என இரண்டு நாடுகளின் மீடியாவினால் வெகுவாக பில்டப் கொடுக்கப்பட்ட மேட்ச். உண்மையும் அதுதான். இந்த இரண்டு நாடுகளும், சர்வதேச போட்டிகளில் எப்போதாவதுதான் மோதுகின்றன. ஆதலால் இருதரப்பு கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சம். இவர்கள் மோதினால் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , , , , , | 2 Comments

டி-20 : இந்தியாவின் அசட்டுத் தோல்வி

உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவில் விளையாடப்படும் டி-20 தொடர். ஸ்ரீலங்கா அணி அவ்வளவு ப்ரமாத அணி அல்ல. இரண்டு மாத முன்னர்தான் நியூஸிலாந்திடம் செம்மையாக உதைவாங்கித் திரும்பிய அணி. மாலிங்கா, மேத்யூஸ், தில்ஷன் போன்ற வீரர்கள் ஆடாத நிலையில், புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐயோ, பாவம் இந்த அணி. இப்படித்தான் நமது மீடியா எழுதி ஸ்ரீலங்காவைப் பரிதாபமாகப் … Continue reading

Posted in கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு | Tagged , , , , , | 1 Comment