ஏய், ஊர்சுற்றி !
கோயில்பக்கம் போனியாடா
நாளைக்காலை அர்ச்சனைக்கு
பட்டரிடம் சொல்லிட்டியா
ட்விட்டர் பையன் காதில்
ஷட்டர் போட்டா மூடியிருக்கிறான்
பட்டர் கிடைக்கும்மா..
பக்கத்துக் கடையிலேயே
பதறாதே வாங்கிட்டு வர்றேன் என்றான்
தொடுதிரையிலிருந்து தலையைத் தூக்காமல்
பல்லைக்கடித்த மாமியின் முன்
கிட்டு மாமா வந்து நிற்க இதுவா நேரம்
வாட்டர்வாலா இன்னுமா வரல..
கூட்டிப்பெருக்கற கோகிலாவையும் காணோம்
திட்டக்கூடாதுன்னு பாக்குறேன் காலைல..
கிட்டக்கவந்து மனுஷன் இப்படியா அடுக்குவார்
விட்டிருப்பாள் பட்டுன்னு கன்னத்தில் ஒன்னு
கட்டிய புருஷனாச்சேன்னுதான் ..
வெட்டுவதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு
சட்டென நகர்ந்துவிட்டாள் மாமி
**