குயில், கோவில், நதி .. !

தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்
கொண்டது எனது அரசாங்கம்
குயில்கள் வாழும் கலைக்கோவில்..
கொண்டது எனது அரசாங்கம்

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக..

கவிஞன் ஒருவன் ஆனந்தமாய் எழுதியிருக்கிறானே என்று, காலைநேரத்தில் மனதில்வந்த ஒரு அதிசயம்போல் வார்த்தைகளை ரசித்துப் பாடியவாறே வெளியே வந்து பார்த்தேன். தப்புசெய்துவிட்டேன். ஒரு பக்கம் எடப்பாடி. இன்னொரு பக்கம் குமாரசாமி. குயில்கள் வாழும் கலைக்கோவிலா? கோட்டான்கள் கொக்கரிக்கும் கொலைக்கூடங்களாக அல்லவா ஆகிவிட்டது என் நாடு? பாடும் பறவைகளும் பறந்தோடிவிட்டனவே? ஓடும் நதிகள் எனக்கெப்படி சொந்தமாகும் – தலைவிரித்து ஆடும் கொடூரங்கள் விடாது துரத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் ?

**