வழி மாறிய வழி

உன்னைப் படித்ததால்
ஒருவாறு சிந்திக்கிறேனா
இல்லாவிடில் வேறுவிதமாய்
சிந்தித்திருப்பேனோ
வழி தவறி, மாற்றுவழி சென்றிருப்பேன்
தடம் மாறிச் சென்றால்
புது இடத்துக்குப் போய்ச் சேரலாமே
வழி தவறாது தொடரும் ஆடுகள்
கடைசியில் போய்ச் சேருமிடம்
கசாப்புக்கடை அல்லவா

**