நகரத்தின் சாலை ஒன்றில்

அலுவலோ அலட்சியமோ ஆடம்பரமோ
சீறிவரும் வாகனங்களை எரிச்சலோடு
நிறுத்துகிறது சிவப்பு
குலுங்கி நின்ற வாகனங்கள் அமைத்த
கோணல் வழிகளில் ஏந்திய கையுடன்
சோர்வே துணையாக ஊர்கிறாய்
கையில் விழுகின்றன சில காசுகள்
முகத்தில் பட்டுத் தெரிக்கின்றது
அவர்களின் அளவிலா அலட்சியம்
பச்சை பார்த்துப் பாய்வதற்குத்
தயாராகின்றன வாகனங்கள்
எந்த நிறமும் எந்த செய்தியையும்
உனக்கெனச் சொல்லாத நிலையில்
நீ கடந்து செல்கிறாய்
அவர்களையும் கடக்கிறது
அர்த்தமற்ற வாழ்க்கை

**