Tag Archives: சாரு நிவேதிதா
சுஜாதா – ஸ்டைல், substance . .
சுஜாதாவின் புனைவுகளில், அறுபதுகளில், தமிழ் உரைநடை புதுத்தோற்றம் கொண்டு வாசகர்களை மிரளவைத்தது. மரபு எழுத்துப்பாணியிலேயே மயங்கிக்கிடந்த வாசகர்களைக் கிளப்பி, எழுந்து உட்காரவைத்தவர் சுஜாதா. அவரது மொழி, தமிழோடு ஆங்கிலம் கலந்த பேச்சுமொழி; கூடவே இளைஞர்களின் மொழியாகவும் அது அமைந்துவிட்டதால், இளம் வாசகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. அரைத்த மாவையே திருப்பித் திருப்பி அரைக்கும் ஸ்டீரியோ டைப் எழுத்து … Continue reading
நேற்றும் நாளையும்
காலைக் காஃபியை மெதுவாக ஸிப் செய்துகொண்டு வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். தினமும் ஒருமுறையாவது விமலாதித்த மாமல்லன், ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று எட்டிப் பார்த்துவிடுவது வழக்கம். இலக்கிய தாகம் என்றெல்லாம் ஜல்லியடிக்க விருப்பமில்லை. ஏதாவது சண்டை, சர்ச்சை, சுவாரஸ்யம் நிகழ்ந்திருக்கிறதா என்று அப்டேட் செய்துகொள்ளத்தான். சில சமயங்களில் அப்படியே நல்ல வாசிப்பனுபவமும் அமைந்துவிடுவதுண்டு. உதாரணம்: மாமல்லனின் ‘படித்த … Continue reading
கடைத்தெருக் கதைசொல்லி
ஆ. மாதவன் என்கிற பெயரை மேம்போக்காகத் தமிழ் படிக்கும் பெரும்பாலானோர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆழமாக எதையும் சென்று நோக்கும் பழக்கம்-அதுவும் இலக்கியம் போன்ற வகைமையில்- பொதுவாக தமிழர்க்கில்லை. பூர்வீகம் திருநெல்வேலியாக இருந்தபோதிலும், மாதவன் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பத்திலிருந்தே வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கிய வெளியில் ஒரு ‘low profile’ எழுத்தாளர். அவருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடெமி … Continue reading