’சொல்வனம்’ கலை, இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதைகள் – ’பின்னிரவின் நிலா’ மற்றும் ’நிஜமாக ஒரு உலகம்’ – இரண்டும் இப்போது ‘சொல்வனம் யூ-ட்யூப் சேனலில்’ பார்க்க/கேட்கக் கிடைக்கின்றன. நன்றி : சொல்வனம் ஆசிரியர் குழு / சரஸ்வதி தியாகராஜன்.
YouTube லிங்க் :
இணையத்தில் வாசிக்க விரும்புபவர்கள் solvanam.com சென்று வழக்கம்போல் வாசிக்கலாம்.
வேல்ஸ் (British Wales) பிராந்தியத்தின் கிராமிய வெளியில், வேல்ஷ் ஆங்கிலிக்கன் சர்ச்சில் ஒரு பாதிரியாக இளம் வயதிலிருந்தே பணியாற்ற ஆரம்பித்து, பல வருடங்களாக சர்ச் பணியில் ஆழ்ந்திருந்தவர் ஆர்.எஸ். தாமஸ்.
Welsh Poet R.S. Thomas
வேல்ஸின் சூழ்ந்து படர்ந்திருக்கும் நீல மலைகள், ஆறுகள், அப்பாவி மக்களென இயற்கையின் வண்ணங்கள் அவரில் பெரிதும் வியாபித்துக்கிடந்தன. மெருகேற்றி அவரை உருவாக்கி ஒரு கவிஞனாய் வெளியுலகிற்கு ஒரு கட்டத்தில் காண்பித்தன. மண்ணின் மைந்தனாக இல்லாமல், உலகளாவிய கவிஞனாக நீ இருக்கமுடியாது எனும் ஆங்கிலேயக் கவி ராபர்ட் ஃப்ராஸ்டின் கூற்றை ஆமோதிப்பதுபோல் தன் தாய்மண்ணான வேல்ஸ் நிலத்தை, மனிதர்களை தொடர்ந்து தன் எழுத்தில் வெளிக்கொணர்ந்தவாறே இருந்தார் அவர். பணியாற்றுமாறு நேர்ந்த வேல்ஸ் சர்ச்சின் பணிசூழல், செயல்பாடுகள் ஒருபுறம், மாறா நம்பிக்கையுடன் வந்து சென்ற ஒன்றுமறியா மனிதர்களின் வாழ்வு மதிப்பீடுகள் மறுபுறம் எனவும், பொதுவாக தேசத்தின் கலாச்சாரச் சீரழிவுபற்றிய கவலையும் விரவிக்கிடக்கின்றன அவரது கவிதை வெளியில். இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஆங்கிலக் கவிஞர்களுள் ஒருவராக பிரசித்தி பெற்றிருந்த தாமஸ், நோபல் பரிசுக்கெனப் பரிந்துரைக்கப்படலாம் எனும் பேச்சும் இருந்தது ஒரு கட்டத்தில். பிரிட்டிஷ் ராணியின் கவிதைக்கான தங்க மடலை 1964-ல் பெற்றார். 2000-ல் மறைந்தார்.
ஆர்.எஸ். தாமஸின் சில கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவர்பற்றிய என் மேற்கண்ட குறிப்போடு அந்தக் கவிதைகளை ‘சொல்வனம்’ இலக்கிய இதழ் வெளியிட்டிருக்கிறது. நன்றி: ’சொல்வனம்’.
சொல்வனத்தின் நடப்பிதழில் காணப்படும் தாமஸின் கவிதைகளில் மூன்றைக் கீழே தருகிறேன்: ( மற்றவைகளை சோம்பல்படாமல், சமர்த்தாக ‘சொல்வனம்’பக்கம்போய் வாசிப்பீர்களல்லவா ! https://solvanam.com )
கீழ்வரும் என் இரு கவிதைகள், ‘பதாகை’ இலக்கிய இதழில் (அக்டோபர் 11, 2021) பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி : பதாகை https://padhaakai.com
காற்றினிலே
தன்வீட்டு வாசலில் ஒரு அந்திப்பொழுதில் தனியாக உட்கார்ந்திருக்கிறான் அந்த வயதான மனிதன் கண் மங்கி நாளாகிவிட்டது காது நன்றாகக் கேட்கிறது தூரத்தில் வந்துகொண்டிருக்கும் யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள் கேட்க ஆரம்பிக்கின்றன அவனுக்கு எதிர்த் தெருவில் அவர்கள் நெருங்க நெருங்க அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில் உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள் கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ காதுகளை மென்னொலி அலைகள் கதகதப்பாய் வருடுகின்றன சிலிர்த்துக்கொள்கிறான் மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க மயக்கும் குரல்கள் மங்கி மறைய பெருமூச்சு விடுகிறான் தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள் தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக
**
ஜீவிதம்
கவிழ்க்கப்பட்ட நிலையில் விசித்திர மதுக்கோப்பை இந்த பிரம்மாண்ட ஆகாசம் அதிகமாக நக்ஷத்திரமும் மிதமாக சந்திரனும் கொஞ்சமாக சூரியனுமாய் கிறங்கவைக்கும் காக்டெய்ல் களிப்போடு இதழ் பொருத்தி மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன் கந்தர்வ போதையில் கரைகிறது காலம்
குப்பைகூளங்களைத் திமிறித் தள்ளிவிட்டு குதூகலமாய் எழுந்து கொஞ்சமாக உயர்ந்திருந்தது அந்தச் செடியின் ஜீவன் வானம் பார்க்கும் இளமிலைகளில் தீரா நடனமாடிக்கொண்டிருந்தது குருத்தொன்று தலையில் பொங்கியெழத் தயாராய். தன்னைத் தீண்டப்பார்க்கும் தென்றலின் விஷம விரல்களை மெல்ல விலக்கியது செடி சீண்டும் ஸ்பரிசமேபோல் தன்மேல் படரும் சூரியகிரணங்களை காணாததுபோல் இருந்தும் மெல்ல மெல்ல மேல்வந்து ஒரு நாள் உன்னைத் தொடுவேன் எனத் தனக்குள் சொல்லிக்கொண்டது இவ்வளவையும் நான் ஆசையாக அள்ளிக்கொண்டிருக்கும் அபூர்வ வேளையில் நல்லவேளை யாரும் பின்னால் வந்து நின்று- இந்தச் செடியின் இலையை அரைச்சுக் குடிச்சா இடுப்புவலி போயிரும் சார் என்று இன்னும் சொல்லவில்லை
**
முகநாடகம்
சரியாக அணிந்துகொள்ளவில்லை என்பதான திடீர் உணர்வினால்போல் முகக்கவசத்தை மெல்ல அவிழ்த்து மீண்டும் போட்டுக்கொள்வதாய் ஒரு தருணத்தை அமைத்து எதிரே கடக்கப்போகும் எனக்குன் தளிர் முகத்தை காண்பித்து மறைத்த உன் குறுநாடகம் கொரோனாவின் பின்புலமின்றி சாத்தியமாகியிருக்குமா என்ன?
**
என் மேற்கண்ட இரு கவிதைகள் ’சொல்வன’த்தின் நடப்பிதழில் வெளிவந்துள்ளன. நன்றி: சொல்வனம்.
மேலும் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகளுக்கு, சென்று வாசியுங்கள் : https://solvanam.com
’இன்று இங்கு வந்திருக்கிறேன்’, ‘டார்ச்சர்’ என்கிற தலைப்புகளில் என் இரு கவிதைகள் ‘பதாகை’ இணைய இலக்கிய இதழில் (23 ஆகஸ்டு, 2021) வெளிவந்திருக்கின்றன. வாசகர்கள், குறிப்பாக கவிதாப்ரியர்கள்(!) பதாகையில் வாசிக்க, கீழே தந்திருகிறேன் லிங்க்:
எனது ‘குயில் கோயில் நதி விதி’ இலவச வாசிப்பில். இன்று 15 ஜூன் மதியம் 12:30-லிருந்து , 16 ஜூன் மதியம் 12:29 வரை (IST), தரவிறக்கம் செய்துகொள்ள உங்களுக்கு நேரமிருக்கிறது.
அமேஸான் லிங்க்: ASIN: B095WF6XZY
அமேஸான் அக்கவுண்ட் உள்ள அன்பர்கள், கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ, டேப்லட்டிலோ ’Free Kindle App’ -ஐத் தரவிறக்கம் செய்துகொண்டு, இந்த சலுகையை அனுபவிக்கலாம்.
ஜூன் 16, 2021 மதியம் 12:30 -லிருந்து விலை ரூ.105 கொடுத்து வாங்கி, வாசித்துக்கொண்டே போகலாம் எனவும் விளக்கவேண்டுமா என்ன !
அடியேனின் இன்னுமொரு மின்னூல் அமேஸானில் வெளிவந்துள்ளது:
தாமதத்திற்கு அருந்துகிறேன்
சற்று தாமதமாக(!) வந்திருக்கும் ஏகாந்தனின் முதல் கவிதைத் தொகுப்பு.
இந்த மின்புத்தகத்தில் 51 கவிதைகள் உள்ளன. பெரும்பாலும் சிறுகவிதைகள், ஒன்றிரண்டு சற்றே நீண்ட வசன கவிதைகள். சில வலைப்பக்கத்தில் முகம் காட்டியவை. சில புதிதாக வந்திறங்கியவை என அமைந்துவிட்ட தொகுப்பு.
வாசக, வாசகியர் மேற்கண்ட வாய்ப்பைப் பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வாசித்தபிறகு, அமேஸான் பக்கத்தில் சம்பந்தப்பட்ட புத்தகத்துக்குக் கீழே உங்களது ‘customer review’ -வை ’ஸ்டார் ரேட்டிங்’ மூலமாக, அல்லது எழுத்துமூலமாகத் தந்தீர்களானால் நல்லது. நன்றி.
இந்தியா என்கிற மாபெரும் தேசத்தில் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், நிகழ்வுகள் இவற்றோடு, கலாம், காந்தி, கமல் ஹாசன், ரஜினிகாந்த் என வேகமாகக் காட்டிச் செல்லும் கட்டுரைகள். பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் எனவும் ஆங்காங்கே காட்சிகள் இருக்கும். கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் அங்கதம் !
இரண்டு நூல்களையும், ’அமேஸான் அக்கவுண்ட்’ உள்ள அன்பர்கள் ’இலவச Kindle App’-ஐத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரிலோ, மொபைலிலோ படிக்கலாம். Kindle Unlimited membership -உள்ளவர்கள் இலவசமாகப் படிக்கலாம். மற்ற அன்பர்கள் விலை கொடுத்து வாசிக்கவேண்டியிருக்கும்!
‘சொல்வனம்’ இணைய இதழில் (இதழ்:186, தேதி:8-3-2018) என் சிறுகதை ‘பின்னிரவின் நிலா’ வெளிவந்துள்ளது. வாசகர்களை சொல்வனம் இணையதளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.