அடங்காதது

தமிழின் தற்காலக் கவிதைகள்
தனக்குப் பிடித்ததென
அவர் போட்ட தொகுப்பில் ஐம்பது
இவர் போட்டதில் நூறு
எடுத்துப் பார்த்தேன்
எதிலும் இல்லை
என் கவிதை
புரிகிறது
ஐம்பதிலும் நூறிலும்
அடங்கிவிடும் எழுத்தா என்னுடையது ?
அட போங்கடா !

**