Tag Archives: இலக்கியம்

குரல் உயர்த்தும் கமல் ஹாசன்

இதுநாள்வரை அடக்கி வாசிப்பதுபோல் வாசித்துவிட்டு இப்போது குரல் உயர்த்துகிறார்; திடீரென ‘தலைவன் இருக்கிறான்!’ என்கிறார்! அவரைப்பற்றிய செய்திகளுக்கு அலட்சியம் காட்டுவோரும்கூடத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். நாளுக்குநாள், ட்விட்டர் தடதடக்கிறது. தமிழ்ப் பத்திரிக்கைகள்/ சேனல்களின் பேட்டரிகள் ஃபுல் சார்ஜில் தயாராய் இருக்கின்றன. தமிழ்த்திரை உலகின் தீர்க்கமான நடிகர் கமல் ஹாசன். ஏன், இந்தியாவிலேயே விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சிறப்பான … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , , | 5 Comments

சார்வாகன் – படைப்பும் பணியும்

தமிழின் இலக்கிய ரசிகர்கள்கூட அதிகம் கேட்டிராத பெயர். ஒருமுறை, இலக்கியப் படைப்புகளுக்கான `அழியாச்சுடர்கள்` வலைத்தளத்தில் இலக்கிய ஆளுமைகளின் பெயர் தேடுகையில் , தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் எவ்வளவோ பேர்களுக்கிடையில் “..சம்பத், சா.கந்தசாமி, சாரு நிவேதிதா, சார்வாகன், சி.மோகன்…“என்று செல்லும் வரிசையில் கண்ணில்பட்ட பெயர். சற்றே வித்தியாசமான, ஆதலால் கவர்ச்சியாய்த் தோன்றும் பெயர். எழுத்தாளர் சார்வாகன் `டாக்டர் … Continue reading

Posted in இலக்கியம், சமூகம், புனைவுகள் | Tagged , , , , , , , | Leave a comment

வெங்கட் சாமிநாதன்: அஞ்சலியும் மேற்கொண்டும்

சமீபத்தில் மறைந்த வெங்கட் சாமிநாதனுக்கான கூட்டம் 1-11-2015 அன்று காலையில் பெங்களூர் – சி.வி.ராமன் நகரில் நடக்க இருப்பதுபற்றிய அறிவிப்பை எழுத்தாளர்-பதிவர் ராமலக்ஷ்மியின் வலைப்பக்கம் வழியாக அறிந்தேன். கலை-இலக்கிய விமரிசன உலகின், தவிர்க்கமுடியாத ஆளுமையான வெ.சா.வுக்கான கூட்டமா? விடக்கூடாது எனத் தோன்றியது. கூட்டத்திற்குச் சென்றேன். நண்பர் சம்பந்தம் & கோ-வின் சீரிய முயற்சிகளினால் நன்றாக ஏற்பாடுகள் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை | Tagged , , , , , , , , , , | 1 Comment

வெங்கட் சாமிநாதன்

நான் படிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுவதைவிட, விமரிசனம் என்கிற பெயரால் தாக்கப்படுவதையே விரும்புவேன். -சாமுவேல் ஜான்சன். எந்த ஒரு கலாச்சாரத்திலும், மொழியிலும் இலக்கிய-கலை விமரிசனம் என்பது ஒரு சீரிய கலை. எளிதான விஷயம்போல் தோன்றும் சிக்கலான சங்கதி! எளிதில் கைவரும் கலை அல்ல. நவீனத்தமிழின் இலக்கிய விமரிசக முன்னோடிகளாக வ.வே.சு ஐயர், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறிப்பிடமுடியும். அண்மைக்காலத்தில், … Continue reading

Posted in கட்டுரை, புனைவுகள் | Tagged , , , , , , | 2 Comments