Tag Archives: இங்கிலாந்து

மகளிர் க்ரிக்கெட்: இந்தியா உலகக்கோப்பையை வெல்லுமா?

இங்கிலாந்தில் விமரிசையாக நடந்துவரும் மகளிர்க்கான க்ரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளின் இறுதியாட்டம் இன்று இங்கிலாந்தின் லார்ட்ஸ் (Lords) மைதானத்தில் நடக்கவிருக்கிறது. (முந்தைய பதிவொன்றில் இந்திய கேப்டன் மித்தாலி ராஜைப்பற்றிப் பார்த்திருந்தோம்). ஆரம்ப மேட்ச்சில் இங்கிலாந்தை நொறுக்கிய இந்திய மகளிரணி, நிதானம், ஆக்ரோஷம் எனக் கலந்துகட்டியாக அடித்து ஆடி, செமிஃபைனலுக்கு வந்து சேர்ந்தது. செமிஃபைனலில் எதிர் நின்றதோ நடப்பு … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , , | 1 Comment

க்ரிக்கெட்: கல்கத்தா மேட்ச்- இங்கிலாந்தின் வெற்றி

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது. முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , | Leave a comment

க்ரிக்கெட்: இந்திய வெற்றியில் யுவராஜ் – தோனி ஷோ !

ஒதிஷாவின் கட்டக்கில் (Cuttack) நேற்று (19-1-17) நடந்த இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்-தோனி ஜோடியின் மறக்கமுடியாத மட்டையாட்டம், கடுமையாகப் போராடிய இங்கிலாந்துக்கெதிராக, இந்தியாவுக்குத் தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தது. முதலில் பேட் செய்த இந்தியா வழக்கம்போல் தடுமாறியது. ராஹுல், தவண், கோஹ்லி ஆகிய புலிகள் ஆட ஆரம்பிக்கும் முன்னரே, துல்லிய வேகம் காட்டிய … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , , | Leave a comment

க்ரிக்கெட்: புனேயில் கோஹ்லி, கேதார் சரவெடி !

நேற்று (15-1-17), புனேயில் நடைபெற்ற முதல் ஒரு-நாள் க்ரிக்கெட் போட்டியில் விராட் கோஹ்லி, கேதார் ஜாதவ் ஆகியோரின் ரன் மழையால், இந்தியா பெரிய இலக்கைத் தகர்த்து வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் துவக்க வீரர் ஜேசன் ராய் அருமையாக ஆடி 36 பந்துகளில் அரைசதம் கடக்க இங்கிலாந்து குஷியானது. ’ஆடு மனமே ஆடு… … Continue reading

Posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , | Leave a comment

கோஹ்லியின் கீழ் தோனி !

மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பைத் துறந்தபின், விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி பங்கேற்கும் முதல் ஒரு-நாள் தொடர் இன்று (15-01-2017) புனேயில் ஆரம்பமாகிறது. கடந்த மாதம் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரில் படுதோல்வி கண்ட இங்கிலாந்து எதிரணி; ஒரு-நாள் கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட் அய்ன் மார்கன் (Eoin Morgan) தலைமையில். இந்தியாவிற்கு இரண்டு கிரிக்கெட் கேப்டன்கள் … Continue reading

Posted in அனுபவம், கட்டுரை, கிரிக்கெட், புனைவுகள் | Tagged , , , , , , , , | 1 Comment