உள்ளும் வெளியும்

அடையாறு ஆனந்தபவனின்

காஜுகட்லியில் லயித்து

ஆஹா என்றது நாக்கு

கூடவே வந்தது ஞாபகம்

நாளை இதைத்

தின்னவிடமாட்டாள் மனைவி

ஆவணி அவிட்டம் ..

ஆகாது வெளிப்பண்டம்

– ஏ கா ந் த ன்