Tag Archives: ஆசை

ஒரு பெங்களூர் மாலை

கஃபெடரியாவுக்கு இது பரவாயில்லை முதுகிலிருந்த மூட்டையை இறக்கிவைத்துக்கொண்டே சொன்னாள் கிறக்கமான நயனங்களையுடைய அவள் இங்கேயே உட்கார்ந்து ஏதாவது சாப்பிடலாம் மஞ்சள் நாற்காலிகளை தங்களுக்காக மரத்தடியில் இழுத்து வைத்த இன்னொருத்தி மகிழ்வாய்க் குமிழ்வாய் மலர்ந்தாள் கூந்தலைக் கோதிக்கொண்டிருந்த மூன்றாவது அழகி முன்னேறிச் சென்றாள் மூவருக்குமாய் ஏதோ வாங்கிவந்தாள் ஆளுக்கொரு ப்ளேட்டாகக் கையிலேந்தி அரைவட்டமாய் அமர்ந்துகொண்டு சலசலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , | 3 Comments

தொலைந்துபோன கடிதம்

தினமணி 25 ஜனவரி, 2016-இதழில் வெளியான கவிதை: தொலைந்துபோன கடிதம் தொலைந்துபோன கடிதமாய் வாழ்க்கை துவண்டுபோய் நிற்பவனின் தீராத வேட்கை நினைவுக்கடலின் ஓயாத பெரும் ஓசைகள் நித்யமாய் அலைபாயும் அடங்காத ஆசைகள் கைவிட்டு நழுவிய கண நேர வாய்ப்புகள் காலம் செய்த தாங்கவொண்ணா ஏய்ப்புகள் கலைந்து போன கனவு இழந்துபோன தூக்கம் எஞ்சி இருக்கும் வாழ்வின் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , , | 3 Comments

தனி ஒருவன்

வேண்டுதல் பிரார்த்தனை பணங்காசு நகைநட்டு சகலத்தையும் நேரில் சமர்ப்பிக்கவென லட்சக்கணக்கில் மோதிக்கொண்டிருந்தது பக்தர் கூட்டம் தினம் தினம் சக்திவாய்ந்த அந்த தெய்வமோ வழிமேல் விழிவைத்துக் காலமெலாம் காத்திருந்தது எந்த பாரத்தையும் தன்மீது போடாமல் எதையும் கேட்காமல் வேண்டாமல் தன்னை ஒருமுறை பார்த்துவிட்டாலே போதும் என்கிற ஆசையை மட்டும் சுமந்துவரும் அந்த ஒருவனை எதிர்பார்த்து **

Posted in கவிதை, புனைவுகள் | Tagged , , , | 3 Comments