’’ஆழ்நிலை தியானத்தை
அந்நிய நாடுகளில்
அரங்கேற்றிக் காண்பித்த
இந்திய ஆன்மிக குரு
இறந்த நாள் பிப்ரவரி 5, 1917.
அவர் 1939-ல் .. ஸ்வாமியின் சீடராகி
1941-லிருந்து 1953 வரை
இமயமலைச் சாரலில் செய்தது தவம்
மேற்கொண்டு ஸ்தாபித்தது ஒரு ஆசிரமம்
உலகப்பயணத்தை 1958-ல் தொடங்கி..’’
ஐயோ.. நிறுத்துங்கடா.. டேய் !
முடில..
புரிந்துகொண்டேன்
புரிந்துகொண்டேன்
இறந்தவர் மறுபடி பிறந்துவந்து
இணக்கமாய் வாழ்வதெல்லாம்
இந்தியாவில் மட்டும்தான்
தெளிவாகச் சித்தரித்த
தெள்ளுமணி தமிழ் மீடியாவே
தலைவணங்குகிறேன்
காலைக்காப்பி ஆறிக்கொண்டிருக்கிறது..
கொஞ்சம் குடிச்சுக்கட்டுமா?
**ஏகாந்தன்
அடிக்குறிப்பு: நேற்றைய ப் பத்திரிக்கை செய்தி ஒன்று, ஒரு யோகியின் பிறந்த வருடத்தை (1917) ‘இறந்த வருடமாக்கி’, தேதிகளையும் குளறுபடி செய்து வெளியிட்டிருந்தது. அதன் விளைவாகப் பொங்கிய அங்கதக் கவிதையே இது!