இன்னல் எதுவும் தீரவில்லை ஏனெனில் நீ இல்லவே இல்லை இருப்பதாக நினைத்து இரவும் பகலுமாய் உனை இரந்து நின்றேனே இறப்பதற்கு முன்னாவது புரிந்ததே உண்மை ஒருவேளை புரியாமலேயே நான் போயிருந்தால் ? ஒரு மண்ணும் ஆகியிருக்காது இப்போதுமட்டும் என்ன புரிந்துகொண்டுவிட்டதால் புவியிலே நான் நிரந்தரமா சிரிப்பு வந்தது அவனுக்கு இல்லாத நீயே என்னை இப்படிச் சிதைத்திருக்கிறாயே இருந்திருந்தால்.. ஈவுஇரக்கமின்றி ஒழித்துக் கட்டியிருப்பாய் உலகம் முழுவதையுமாய் இல்லை நீ என அறிந்ததில் இன்பம் கொஞ்சம் எனக்கும் வாழ்வில் முதன் முறையாக வாய்விட்டுச் சிரித்தான் மேலும் பொங்கிவர சிரிப்பு சத்தமாக எழுந்தது உயர்ந்தது மேலே இருந்தவன்.. நித்திரை கலைந்தான் எழுந்து உட்கார்ந்தான் என்ன இது இப்படி ஒரு இரைச்சல் கீழே மேகம் விலக்கிப் பார்க்க மேல்நோக்கி சிரித்துக்கொண்டு அவன் இதோ வருகிறேன்.. என்றெழுந்தான் இதுவரை புலப்படாதவன் -ஏகாந்தன் **