Tag Archives: அழகி

அது இல்லாத நாள்

காலைக் காப்பியே கசக்குமாறு கதையை ஆரம்பித்துவைத்தான் பையன் அப்பா! போயிடுத்து.. ஃபோன் பண்ணு! ஃபோன் போட்டால்மட்டும் புறப்பட்டு வந்துவிடுமா ? இட்லி சட்னி மிளகாய்ப்பொடி இதமேதும் தரவில்லை வாய்க்கு பேப்பர்க்காரனும் இன்னும் வரவில்லை ஞாயிறில்கூட என்னய்யா அவசரம் பேப்பர் போடறவனுக்கும்தானே ஞாயிறு படிக்கிறவனுக்குத்தான் எல்லா சுகமுமா உழைப்பாளி வர்க்கத்தின் தூரத்துக் குரல் உடம்பில் சூட்டைப் பரப்புகிறது … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , , , , | 10 Comments

ஒரு பெங்களூர் மாலை

கஃபெடரியாவுக்கு இது பரவாயில்லை முதுகிலிருந்த மூட்டையை இறக்கிவைத்துக்கொண்டே சொன்னாள் கிறக்கமான நயனங்களையுடைய அவள் இங்கேயே உட்கார்ந்து ஏதாவது சாப்பிடலாம் மஞ்சள் நாற்காலிகளை தங்களுக்காக மரத்தடியில் இழுத்து வைத்த இன்னொருத்தி மகிழ்வாய்க் குமிழ்வாய் மலர்ந்தாள் கூந்தலைக் கோதிக்கொண்டிருந்த மூன்றாவது அழகி முன்னேறிச் சென்றாள் மூவருக்குமாய் ஏதோ வாங்கிவந்தாள் ஆளுக்கொரு ப்ளேட்டாகக் கையிலேந்தி அரைவட்டமாய் அமர்ந்துகொண்டு சலசலத்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , , , | 3 Comments