இணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் அம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன.
இதழ் முகவரி : solvanam.com. அன்பர்கள் வாசித்து மகிழலாம்.
இதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.
**