அமைதி

கொஞ்ச நாட்களாகப் பெரிய, பெரிய கட்டுரைகள் அலுப்படித்திருக்கலாம். ஒரு சின்ன கவிதையைப் பார்க்கலாமா?

அமைதி

உன்னைப் போற்றுகிறேனா
கைகூப்பி வணங்குகிறேனா
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
அப்படி ஒரு அவசியம்
இருப்பதாகவும் தோன்றவில்லை
எல்லாமே நீ
எல்லாவுமாக நீ
எனத் தோன்றுகிறது
நிறைவாக இருக்கிறது

**