ரொம்பத்தான் எழுதிவிட்டேனோ உரைநடை? இந்தாருங்கள். பிடியுங்கள் காலையில் கொஞ்சம் கவிதை. . அல்லது கவிதைபோலக் கொஞ்சம் . .
அந்தம்
வெந்ததைத் தின்றுவிட்டு
வேகாமல் போய்விடும் மனிதனே
நொந்ததை – மனம் நொந்ததை
சிந்தையில் தெளியாது அகன்றது
விந்தையே அன்றி வேறென்ன?
**
ஹ்ம்ம்…
புரிந்துகொண்டதுபோல்
தலையாட்டிக்கொள்கிறேன்
சிரித்துக்கொள்கிறேன் சிலமுறை
வேறுசில நேரங்களில் மெல்ல
நினைத்துப் பார்க்கிறேன்
ஏதும் புரிந்துகொண்டேனா உண்மையில் ?
ஹ்ம்ம் .. புரியவில்லை ..
**