ஐந்தும் ஆறும்

அரைவயிறு குறைவயிறாக
அலைந்து திரியும் தெருநாய்களை
மனதினில் எப்போதாவது நிறுத்திச்
சிந்தித்ததுண்டா புத்திசாலி மனிதரே
அவனியில் அவதரித்த
அந்தப் புண்ய தினத்திலிருந்து
அடி உதை வசவுகளைத் தவிர
வேறெதையும் சரியாக உண்டதில்லை
உமது வசவுகளின் கீழ்மையை
ஒருபோதும் அவை அறிந்ததில்லை
ஆறாவது அறிவையோ
அதற்கும் மேலேயோகூட
நீர் கொண்டிருந்தாலும்
அந்த அப்பாவி ஜீவன்களும்
அவ்வப்போது உம்மைத் திருப்பித் திட்டுவதை
நீரும்தான் அறிந்திருக்கமாட்டீர்

**