பிரதானமாக இப்போதிருக்கும் ஈரான், ஆஃப்கானிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான் மற்றும் சுற்றுப்பகுதிகள் நிரவிய பெரும் நிலப்பகுதியே அந்தக் காலத்திய பர்ஷியா. பர்ஷியாவின் தலைசிறந்த கவிஞர், ஞானி என அறியப்பட்டு, இன்றளவும் கொண்டாடப்படுபவர் 13-ஆம் நூற்றாண்டின் ரூமி. ஜலாலுத்தீன் ரூமி (Jalaluddin Rumi). 1207-ல் இவர் பிறந்த இடம் தற்போதைய ஆஃப்கானிஸ்தானில் உள்ள பால்க் (Balkh) எனும் ஊர். ரூமி சிறுவனாக இருக்கும்போது பர்ஷியாவின் மீது மங்கோலியர்கள் அடிக்கடிப் படையெடுத்துத் தாக்கினார்கள். ரூமியின் குடும்பம் நிலைகுலைந்தது. நிலம்பெயரும்படி ஆனது. பாக்தாத், மெக்கா, டமாஸ்கஸ் என எங்கெங்கோ அலைந்து திரிந்து, ஒருவழியாக துருக்கியில் தஞ்சம் புகுந்தது. அங்குள்ள கொன்யா (Konya) என்ற ஊரில்தான், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை வாழ நேர்ந்தது ரூமிக்கு.
ரூமியின் தந்தை, அவருடைய காலத்தில் ஒரு சூஃபி அறிஞர் என அறியப்பட்டவர். சூஃபி என்பது இஸ்லாமின் தனித்துவமான ஒரு பிரிவு. பொதுவான சமயச்சடங்குகள், வழிமுறைகளைத் தாண்டி, இறைஞானத்தின் உயர்நிலையை நோக்கிப் பயணிக்கும், தேடுதலின் உச்சநிலை என சான்றோரால் அறியப்படுவது. தன் தந்தையிடமிருந்து நிறையக் கற்ற ரூமிக்கு, இளம் வயதிலேயே ஞானவழியின் ஆரம்பங்கள் தூரத்துக் காட்சிகளாக தெரியவந்திருக்கலாம்.
சிந்தனையில் ரூமி பின்னணியில்…
அவருடைய தந்தை மறைந்தபோது வாலிபனாக இருந்த ரூமி ஒரு செல்வந்தர். மதவியலும் சட்டமும் முறையாகப் படித்து சமூகத்தில் மதிக்கத்தக்கப் பெரியவராக இருந்தவர். புனித சமய நூல்களில் ஆழ்ந்திருப்பதும், மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்துவதுமாகத் தன் பொழுதினைக் கழித்துக்கொண்டிருந்தார். அந்த நிலையில் அவரது வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அவரது மத்திம வயதினில் வந்து சேர்ந்தார் அந்த ஊருக்கு ஒருவர். வயது சரியாக மதிக்கமுடியாத கந்தல் கிழிசல் தோற்றம். ஒரு நிலையற்ற நிலையில், ஏகாந்தமாக ஒரு மனிதன். சமூக, சமயத் தடைகளைக் கண்டுகொள்ளாத, வினோதமான, சிலசமயங்களில் ஏடாகூடமாகக்கூட என்றும் சராசரி மனிதர்களால் பார்க்கப்படும் சிந்தனைகள், செயல்பாடுகள் அவருடையது. தான் ஒரு பைத்தியக்காரனாக, வேண்டத்தகாதவனாக மற்றவர்களால் பார்க்கப்படுவதைப்பற்றிய கவலை எள்ளளவும் இல்லை. அவரைப் பார்த்தவுடனேயே ரூமிக்கு என்னமோ தெரியவில்லை, பிடித்துப்போய்விட்டது. அவர்தான் ஷாம்ஸ் என ரூமியின் நண்பராகக் குறிப்பிடப்படுபவர். அவரோடு சேர்ந்து ரூமி பழகியிருந்தது, நெருங்கி அளவளாவியது என்னவோ இரண்டே வருடங்கள்தான். ஆனால், அந்தக் குறுகிய காலத்திலேயே ரூமியின் வாழ்வைத் தலைகீழாகப் பிரித்துப்போட்டார் ஷாம்ஸ். ரூமியின் சிந்தனைத்தளம் மிரண்டது. உருமாறியது. ரூமி புரிந்துகொண்டார். தானொரு வசதியான குடும்பத்தில் வந்த எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு பிரமுகர். தன் நண்பனோ ஒரு நாடோடி. பித்தன். ஒன்றும் இல்லாதவன். ஒன்றுமில்லை எனும் பிரக்ஞையும்கூட இல்லாதவன். மனம் போனபடி இயங்குபவன். சமூகத்தின் எந்த இறுக்கங்களும், சட்டங்களும் அவனை ஒன்றும் பாதிக்கவில்லை. அவனை எதுவும் தீண்டுவதாகவே தெரியவில்லை. வேறு ஏதோ ஒரு உலகத்தைச் சேர்ந்தவன்போலும். ஆ.. இவனே எனக்கானவன். என் உயிர்.. என் ஆசான். யாருக்கு, யார் மூலமாய் கண் திறக்கும் என்பதை மேலே உள்ளவனல்லவோ சொல்கிறான் என மயங்கினார் ரூமி. மதித்தார். ஷாம்ஸைத் தவிர அவர் மனதை வேறெதுவும் ஆட்கொள்ளவில்லை அதற்குப்பின் அவரது வாழ்நாளில்.
ஷாம்ஸைப்பற்றி ஊர்க்காரர்கள் இப்படிப் பேசிக்கொண்டார்கள். ஒரு நாடோடி. அகங்காரன், கிறுக்கன். சமூக விரோதி. அவன் ஒரு பறவை.. இதில் சில சரியாக இருக்கலாம். பறவை? ஷாம்ஸினால் ஒரு இடத்தில் வெகுநாள் இருக்கமுடியாது என்பதைப் புரிந்துகொண்டிருந்தார்கள் அவர்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஷாம்ஸ், ஒன்றிலிருந்து ஒன்று தொலைவில் இருந்த இரண்டு ஊர்களில் காணப்பட்டதாகக் கிசுகிசுத்து மிரண்டார்கள். எங்கெங்கோ நொடியில் போய் காணாமற்போய்விடும் பறவைக் குணம். அல்லது விசித்திர சக்தி ?
ரூமியின் இருபதுகளிலேயே ஒரு முறை அந்த ஊருக்கு வந்த ஷாம்ஸ் ரூமியைக் கவனித்திருந்தார். ஆனால் காலம் இன்னும் கனியவில்லை என்று தோன்றியிருக்கிறது. தனக்காக ஒரு மேதை-சிஷ்யனை (சீடன் – அறியாதவன்; ஆனால் உள்ளுக்குள்ளே, மேதையாக உருவாகுமாறு படைக்கப்பட்டவன்), தன் காலம் தாண்டியும் உலகினால் மதிக்கப்படும், பேசப்படும் ஒரு ஆன்மாவைத் தேடிக்கொண்டிருந்தார் ஷாம்ஸ். தன் இரண்டாவது வருகையில் ரூமியை அந்த ஊரின் சந்தையில் காணநேர்ந்தவருக்குப் புரிந்தது. சந்தித்துப் பேச ஆரம்பித்தார். இருவரும் பழகினர். ஒரு மனதாக நெருங்கினர். விளைவு? ஆன்மீகத் தாக்கத்தின் உச்சம். ரூமி ஒரு சுதந்திர ஆத்மாவாகத் தன்னை உணரத் தொடங்கினார். உண்மை அவருக்குள் ஊர்ந்தது, ஆழம் பார்த்தது. மாறுதல்களை தடாலடியாக அறிமுகம் செய்தது. அதற்கப்புறம், எதையும் தன்னிலையிலேயே சுயமாக அணுக ஆரம்பித்தார். ஆராய்ந்தார். காலாவதியாகிவிட்ட, ஊசிப்போன சமூக நம்பிக்கைகள், மதச் சடங்குகளைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்திருந்தார் ரூமி. தனிமனிதனை, சமூகத்தைத் தன் செயற்கைக் கெடுபிடிகளால், சட்டங்களால் பயமுறுத்தும் மதம் எதுவாயினும் அது விஷத்துக்கு சமம் என்றார் வெளிப்படையாக. இறையை அறிதல் என்பது அவ்வகை பாதக நடவடிக்கைகளை முழுதுமாகப் புறந்தள்ளி, முன்னேறும் பயணம். பயம், அவமானம், குற்ற உணர்வு போன்றவைகளைத் தாண்டியது தூய அன்பு. அதனைச் சார்ந்தே, அதில் ஊறியே வாழ்வில் ஒருவன் பயணிக்கவேண்டும் என்பதில் வந்தது தெளிவு.
வெவ்வேறு வகைமை சார்ந்தது எனத் தோன்றும், ஆனால் இறுதி உண்மையை நோக்கியே விடாது பயணிக்கும் ரூமியின் கவிதைகள் (70000-க்கும் மேல்) இந்த நூற்றாண்டின் துவக்கத்தில், மேலும், மேலும் உலகெங்கும் ஆர்வமாக வாசிக்கப்பட்டன. ரூமி என்கிற ஞானி, கவிஞரின் நூதன வாழ்க்கையைப்பற்றி, அது முக்கியம் ஆதலால் – அதன் மறைக்கப்பட்ட பகுதிகளையும் கருத்தில்கொண்டு – Rumi’s Untold Story-From 30-year Research என்கிற ஒரு புத்தகம் (Amazon) எழுதியிருக்கிறார் விருதுபெற்ற அறிஞரும், ரூமி கவிதைகளின் புகழ்பெற்ற மொழியாக்கம் தந்தவருமான ஷாஹ்ராம் ஷிவா. அதில், ரூமி பெரிதும் போற்றும், தன்னை ஆற்றுப்படுத்தியவராகக் கருதும் ஷாம்ஸ், ரூமி வசித்த ஊரிலேயே ரூமியின் இளைய மகனால் கொல்லப்பட்டதாக வருகிறது. கட்டுப்பெட்டி சமூகம், மதக்கோட்பாடுகள் விதித்த சட்டதிட்டங்களை மதிக்காதுபோனதோடு, சமூகத்தைக் கெடுப்பதாக(?), வேற்று சிந்தனைகளை விரித்த ஷாம்ஸ் காணப்பட்டிருக்கவேண்டும்; அதற்குத் தண்டனையாக கௌரவக் கொலை செய்ப்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார் நூலாசிரியர். தன் உயிரின் உயிராய், குருவாய் ஷாம்ஸை மதித்த ரூமியை, இந்தக் கொடும் நிகழ்வு அதிரவைத்தது. ஒரேயடியாகத் துவளவைத்தது. முடங்கிக் கிடந்தார் சில நாட்கள். ஆழ்ந்த துக்கம் தந்த மயான அமைதி, அதன் வெடிப்பாக, வெளிப்பாடாக, ஆன்மீக, தத்துவச் சிதறல்களாக, கவிதை, கவிதையாக எழுதிக் குவித்தார் தன் கடைசிக் காலத்தில். சோகத்தின் உச்சத்தில், தன்னைக் கலாபூர்வமாகத் தேற்றிக்கொள்ள முயன்றிருக்கிறார் ரூமி. தனக்குப்பின், எங்கே இந்த உலகம் ஷாம்ஸ் எனும் மகாமனிதனை, தன் ஆத்மநண்பனை மறந்துவிடுமோ என்கிற அச்சத்தில், தான் எழுதிய பல கவிதைகளின் கீழே ஷாம்ஸ் என்றே குறிப்பிட்டிருக்கிறாராம் ரூமி. தன் சிந்தனாமாற்றத்தின், ஆக்கங்களின் ஊற்று தன் நண்பனே என்கிற புரிதலையும், அதற்கான ஆத்மார்த்த நன்றியறிதலையும் ரூமி இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கவேண்டும். மங்காத ஜீவன் அவருடைய கவிதை வரிகளில் உலவுவதாலேயே, இன்றும் சற்றும் குறையாத ஆவலோடு வாசிக்கப்படுகிறார் ரூமி. வாசகர்களும், ஆய்வாளர்களும் அவரது வாழ்வை, கருத்துக்களை மேன்மேலும் தெரிந்துகொண்டு சிலிர்க்கின்றனர்.
இன்றைய ஈரான், துருக்கி மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் ஜலாலுத்தீன் ரூமியைத் தங்களின் தேசியக் கவிஞராகக் குறிப்பிட்டுக் கொண்டாடுகின்றன. உரிமை கொள்கின்றன. ஆனால் ரூமியின் காலத்தில் இந்த மூன்று நாடுகளும் தனி நாடுகளாய் இருந்ததில்லை. பர்ஷியா எனும் பேரரசின் பகுதிகளாகவே அமைந்திருந்தன. தாடியும், தலைப்பாகையுமாக சுற்றிய ரூமி, தன்னை எந்த ஒரு சமயம் சார்ந்தவராகவும், நாட்டினராகவும் பார்க்கவில்லை. அதனை வெள்ளையாக, ஒரு கவிதையில் குறிப்பிட்டும் இருக்கிறார். ரூமியின் மேதாவிலாசத்தை, அவருக்கு வாய்த்த ஞானத்தின் சக்தியை, வசீகரத்தை அவரது கவிதைகள் சிலவற்றின், எளிய மொழியாக்கமாக அடுத்த பதிவில் .
Good morning Good morning
Called whatsapp all along screaming
Good or bad
Worst or the very best
Morning is just morning
Though you may still be yawning
It doesn’t speak of any warning
Of anything that might come calling
During the course of the day..
Meanwhile, have a great day !
On a strangely seductive night
Everything shone subtly bright
The breeze teasingly thin and exciting
Fragrance simply captivating
From the vastness of the night’s blue
There was no evidence nor any clue
The bullish moon cast a sharp glance
On the virgin earth who had no chance
Nor any desire to safely escape
The celestial affair caught on a landscape
With little me as a secret witness
What more to say, oh, my Goodness!
It feels pretty dull and boring
You have forgotten the caring
Of the ones who hopelessly deserve
And would hold it and preserve
Your spontaneous warmth and love
Express it right away somehow
Tomorrow might turn out to be late
Don´t brood over and say its just fate
ரஷ்யாவின் புகழ்பெற்ற நவீனக்கவிஞர். ஜோசப் ஸ்டாலினின் கொடுங்கோலாட்சியின் கடுமையான சட்ட திட்டங்கள், கெடுபிடிகளுக்கு நடுவே ரஷ்யாவில் கவிஞனாகத் தன் இளமைக்காலத்தை வாழ முயற்சித்தவர். அதனால் பல இன்னல்களுக்குள்ளானவர். 1956-ல் தன் 23-ஆம் வயதில், ‘ஸீமா ஜங்க்ஷன்’ என்கிற புகழ் பெற்ற கவிதையை எழுதினார். உடனேயே இவரது பெயர் ரஷ்ய மக்களின் கவனம் பெற்றது. ஆனால், தனித்துவம், சுதந்திரத்தன்மை இவற்றைத் தன் கவிதைகளில் அதிகமாக வெளிப்படுத்துவதாகக் குற்றம் சாற்றப்பட்டு தான் படித்துவந்த ‘கார்கி இலக்கியக் கழக’த்திலிருந்து அடுத்த ஆண்டே, யேவ்துஷென்கோ (Yevgeny Yevtushenko) வெளியேற்றப்பட்டார். ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவில் ஆட்சிக்கு வந்த குருக்ஷேவ்வின் காலத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்றோருக்கு ஓரளவுக்கு கருத்துச்சுதந்திரம் அனுமதிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் புகழ்பெற்ற கவிதைகளை எழுதினார் யேவ்துஷென்கோ. 1961-ல் இவர் எழுதிய ‘பாபி யர்’ என்கிற கவிதை இவர் எழுதியவற்றிலேயே அதிகப் புகழடைந்தது. ரஷிய சிந்தனை, கலாச்சாரம், சமூக நிலை ஆகியவற்றை ஒருசேர, மேலைநாடுகளுக்குப் படம்பிடித்துக் காண்பித்தது. இரண்டாம் உலகப்போரின்போது யூதர்கள் ஜெர்மானியர்களால் கொல்லப்பட்டதைப்போலவே, ரஷ்ய அரசும் யூதர்களை வேரறுக்க முயன்றது, அதை ரஷ்யா தனது சரித்திரத்திலிருந்து நீக்கியிருந்தது. அது ஒரு சமூக, சரித்திரக் குற்றம் என விவரிக்கிறது இந்தச் சர்ச்சைக்குரிய கவிதை. இதனால் இன்னல்களுக்குள்ளானார் யேவ்துஷென்கோ. இந்தக் கவிதை ரஷ்யாவிலிருந்து கடத்தப்பட்டு மேலை நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டது. முறையாக இசை அமைக்கப்பட்டு யேவ்துஷென்கோவின் மற்ற கவிதைகளோடு மேலை நாட்டு அரங்கங்களில் பாடப்பட்டு புகழ் அடைந்தது.
இது ரஷிய அரசிற்கும் பெரும் சர்வதேச நெருக்கடியைப் பெற்றுத்தந்தது. 1984வரை இந்தக் கவிதை ரஷ்யாவில் அதிகாரபூர்வமாகப் பிரசுரிக்க அனுமதிக்கப்படவில்லை.
In ‘Time’ magazine’s cover
ஏகப்பட்ட சர்ச்சைகளின் ஊடே எழுதிக்கொண்டிருந்த யேவ்துஷென்கோ, போரிஸ் பாஸ்டர்னாக், ராபர்ட் ஃப்ராஸ்ட் போன்ற சமகால எழுத்தாளர்களால் பாராட்டப்பெற்றார். 2000-க்குப்பின்தான் இவருக்கு உரிய மரியாதையும் கௌரவமும் இவரது தாய்நாட்டிலேயே கிடைக்க ஆரம்பித்தது. 2000-ல் ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தினர் தாங்கள் கண்டுபிடித்த நட்சத்திரம் ஒன்றிற்கு இவரது பெயரை வைத்தனர். 2001-ல் ரஷ்ய அரசாங்கம் சைபீரியாவிலுள்ள இவரது பிறந்த நகரான ஸீமாவிலுள்ள இவரது பூர்வீக வீட்டைப் புனரமைப்பு செய்து, அதனை ஒரு கவிதை மியூசியமாக மாற்றிக் கௌரவித்துள்ளது.
யேவ்துஷென்கோ 1933-ல் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் ஸீமா என்னும் நகரத்தில் பிறந்தவர். இயற்பெயர்: யேவ்ஜெனி அலெக்சாண்ட்ரோவிச் காங்னஸ். விவாகரத்தின் காரணமாக தந்தையை சிறுவயதிலேயே பிரிய நேர்ந்தது. தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர். தன் அம்மாவின் பெயரான யேவ்துஷென்கோ என்கி்ற பெயரையே தன் பெயராகக்கொண்டு கவிதைகள் எழுதினார். முதல் கவிதை அவரது 16 ஆவது வயதில் பிரசுரமானது.
யேவ்துஷென்கோவின் ‘பொய்கள்’ என்று தலைப்பிடப்பட்ட கவிதையைக் கீழே, மொழியாக்கம் செய்து தந்திருக்கிறேன்:
பொய்கள்
இளைஞர்களிடம் பொய் சொல்வதெல்லாம் தவறானது
அந்தப் பொய்களை உண்மைதான் என
அவர்களிடமே நிரூபிக்க முயல்வது
அதைவிடவும் தவறு
சொர்க்கத்தில் கடவுள் இருக்கிறார்
உலகத்தில் எல்லாம் சரியாகவே இருக்கின்றன
என்றெல்லாம் அவர்களிடம் சொல்லாதீர்கள்
அவர்களுக்கு எல்லாம் தெரியும்
அவர்களும் மனிதர்கள்தானே
மாறாக, வாழ்வில்
எண்ணற்ற துன்பங்கள் வரவிருப்பதைப்பற்றிக்
கூறுங்கள் அவர்களிடம்
எதிர்காலத்தில் எதைஎதையெல்லாம்
எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதோடு
நிகழ்காலத்தையும் அவர்கள்
நன்றாகப் புரிந்துகொள்ளட்டும்
வாழ்வில் பெருந்தடைகள் இருப்பது உண்மைதான்
அவற்றை எதிர்கொண்டே ஆகவேண்டும்
கஷ்டமும் சோகமும் கூடவே வரும்தான்
என்பதையெல்லாம் தெளிவாக
அவர்களிடம் சொல்லிவிடுங்கள்
இதில் என்ன வந்துவிடப்போகிறது
சந்தோஷத்திற்காகத் தரவேண்டிய விலை என்ன
என்பதை அறியாதவன் ஒருநாளும் வாழ்வில்
சந்தோஷமாக இருக்க மாட்டான்
அவர்களிடம் நீங்கள் காணும் தவறுகளை
ஒருபோதும் மன்னித்துவிடாதீர்கள்
பன்மடங்காக அவைகள் உருவெடுத்து
நம்மை நோக்கியே நிச்சயம் திரும்பி வரும்
அப்படி வந்த பிறகு
நாம் அவர்களை மன்னித்தது போல
நமது மாணாக்கர்கள், நமது பிள்ளைகள்
நம்மை மன்னிக்க மாட்டார்கள்
Got up with a heavy sigh
Time to say bye bye
You should come and stay
Forever forever sang the child
On her way to the door dancing so wild
Nature’s exuberance ardent yet mild
Alright, Good night !
So he said
Left many things unsaid
From then on
Nothing went right
Neither that night
Nor the days that
Painfully followed
Had any ray of light
Shrouded in the darkest mystery
One more to quench the thirst of history?
Facing it, one is sheepishly helpless
Its victims are gullible, countless
With them it is hard, blunt and ruthless
About a blessed few, very few, it is clueless !