Category Archives: கட்டுரை

உண்டோ ?

கிட்டாத பழம்தான் எத்தனை இனிப்பு எட்டாத சிகரம் எவ்வளவு உன்னதம் தேடித்தேடியும் நாடிஓடியும் கிடைக்காத கடவுள்தான் எப்பேர்ப்பட்டவன் அருகிலில்லாக் காதலிக்கு இணை யாருமுண்டோ உலகில்? ** Advertisements

Posted in அனுபவம், இலக்கியம், கவிதை, புனைவுகள் | Tagged , , | 5 Comments

மீண்டும் இந்த நாய்

என்னுடைய முந்தைய டெல்லி வருகைகளின்போது இந்த நாயைக் கவனித்திருக்கிறேன். மென்பழுப்பு நிறம். எங்கள் அடுக்குமாடிக்குடியிருப்பின் கீழ் தளத்தில் சுற்றிக்கொண்டிருக்கும். நிழலில் எப்போதாவது படுத்துக்கொண்டிருக்கும். எங்கள் காம்ப்ளெக்சில் வசிக்கும் பெரும்பாலானவர்களை இது கண்டுகொள்வதில்லை என்பதைப் பார்த்திருக்கிறேன். செலக்டிவ்-ஆகத்தான் வாலாட்டும் அல்லது பின்னே வரும். அதிகம் குலைக்காது. ஆனால் விசிட்டர்களில் சிலரைப் பார்த்ததும் ஏதோ புரிந்துகொள்கிறது. அவர்களை குரைத்து … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , | 10 Comments

. . புரிந்தும் புரியாமலும்

காலையில் ஒரு இருபது-நிமிட நடைக்குப்பின் சாலையோரமாக அந்த ரெஸ்ட்டாரண்ட் தலைதூக்கும். நடைக்கு ஒரு சின்ன இடைவெளி கொடுக்க நினைத்து, அதற்குள்போய் ஒரு கிளாஸ் காஃபி குடிப்பது வழக்கம். கிளாஸ் என்றால் பெங்களூரின் ஷார்ட் கிளாஸ். வேகமாகக் குடித்தால் நொடியில் காலியாகிவிடும். சூடாக வாங்கி, நிதானமாக அனுபவித்துக் குடிப்பதே உசிதம். காலைக் குளிருக்கும் இதம். காஃபியை வாங்கிக்கொண்டு … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , | 14 Comments

என்ன, நான் சொல்வது ?

இருக்கிறது .. வாயைத் திறக்குமுன்னே இல்லவே இல்லை என்கிறது மறுப்பு முடித்துவிடலாம்.. நம்பிக்கை துளிர்க்கையில் நம்மால் முடியாது எனும் அவநம்பிக்கை நடுவிலே எழுகிறது முட்புதராய் நடுங்காதே நல்லதே நடக்கும் .. தேற்றுவதற்குள் தேறாது ஒன்றும் பேராது என வேறாக விஷயத்தைச் சித்தரிக்கும் போறாத வேளையில் பிறப்பெடுத்து சேறாகக் குழப்பும் ஜீவன்கள் எதிர்ச்சொல்லுக்கும் மறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் அவதூறுக்கும் … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , | 10 Comments

’சொல்வனம்’ சிறுகதை : நிஜமாக ஒரு உலகம்

’சொல்வனம்’ இணையப் பத்திரிக்கையின் நடப்பு இதழில் (இதழ் 182, 26 டிசெம்பர், 2017) எனது சிறுகதை ‘நிஜமாக ஒரு உலகம்’ வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன். லிங்க்: https://solvanam.com/?p=51152 நன்றி: ’சொல்வனம்’ **

Posted in அனுபவம், இலக்கியம், சிறுகதை, புனைவுகள் | Tagged , , | 11 Comments

கந்தர்வன் சிறுகதை ’மைதானத்து மரங்கள்’

எழுத்தாளர் கந்தர்வன் பற்றிய குறிப்பை முந்தைய பதிவில் பார்த்தோம். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான ‘மைதானத்து மரங்கள்’ கதைபற்றிக் கீழே பார்ப்போம்: சிறுவயதிலிருந்தே, தன் வீட்டருகே இருந்த பெரிய மைதானத்தையும், அதனைச் சூழ்ந்திருந்த அடர்மரங்களையும் பார்த்து வளர்ந்தவனின் கதை. மைதானம், மரங்களை வைத்துக்கொண்டு என்னய்யா பெரிய்ய கதை என்கிறீர்கள். உங்களுக்கு கந்தர்வனே சொன்னால்தான் சரிப்படும்.. படியுங்கள்: … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , | 17 Comments

எழுத்தாளர் கந்தர்வன்

முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கந்தர்வனின் கதை ஒன்றைப் பார்க்குமுன், படைப்பாளிபற்றி சிறு குறிப்பு. கந்தர்வன்: இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரின் இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் உயர்பதவியில் இருந்ததோடு, தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றெல்லாம் இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய … Continue reading

Posted in அனுபவம், இலக்கியம், புனைவுகள் | Tagged , , , , , , , | 12 Comments