About

இளம்பிராயத்தைத் தமிழ்நாட்டில் கழித்திருந்தாலும், வெளி நாடுகளில் கொஞ்ச காலம் பணி நிமித்தம் வாழ்ந்ததுண்டு. தற்போது வசிப்பது இந்தியாவின் தலைநகர். பெங்களூர் எனது இரண்டாவது வாசஸ்தலமாக ஆகிவிட்டிருக்கிறது!

வாசிப்பு ஆர்வம் சிறுவயதிலிருந்தே. (`சின்ன வயசிலிருந்தே நடிப்புன்னா எனக்கு உயிர்!`என்று வளர்ந்துவரும் நடிகை சொல்வதுபோல் இது இருந்தால், நான் என்ன செய்யட்டும்!) `பாடப் புஸ்தகத்தைத் தவிரக் கண்டதையெல்லாம் படி! நீ உருப்பட்டாப்போலத்தான்!` என அம்மாவினால் இளம்பிராயத்தில் சபிக்கப்பட்ட பாக்யம் உண்டு. எனினும் நிறையப் படித்திருப்பதாகச் சொல்வதற்கில்லை. Most of the time, very selective reading only. சமகாலத் தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது. தத்துவமும், ஆன்மிகமும், கவிதையும் ஏனோ பதின்மவயதிலிருந்தே என்னை மயக்கி வருகின்றன !

கவிதை என்னும் வடிவத்தை நான் வெகுவாக மோகிப்பதாகத் தெரிகிறது. அதனாலேயே சில வருடங்களாகத் தமிழில் மென் கவிதைகளை எழுதி வருகிறேன். இப்போது நிறையக் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்துள்ளேன். Cricket has remained an obsession from teenage. கிரிக்கெட் கட்டுரைகள் அவ்வப்போது என் பக்கங்களில் வரும். மூடுக்கேற்றபடி, சில ஆங்கிலக்கவிதைகளும் தலைகாட்டும் !

முன்பு ஜப்பானில் டோக்கியோவிலிருந்து வந்துகொண்டிருந்த தமிழ் மலர்களில் எனது ஆரம்பக்கவிதைகளில் சில வெளிவந்தன. சிலவருடங்களாக காங்கோவின் கின்ஷாசாவிலிருந்து வெளிவரும் மின்னிதழான ‘தமிழ்ச்சாரல்’ மாத இதழில் எனது கவிதைகள் தொடர்ந்து வருகின்றன. எனது கட்டுரைகளுக்கென சிலசமயங்களில், காங்கோ தமிழன்பர்கள் தனிப்பக்கம் வேறு ஒதுக்கிவிடுகிறார்கள்.  தினமணி இணைய இதழில் சில கவிதைகள் அச்சேறியுள்ளன . இணையத்தில், ‘வார்ப்பு’, `அதீதம்` இதழ்கள் என் கவிதைகளை வெளியிட்டுத் தங்களை கௌரவப்படுத்திக்கொள்ள முயன்றுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

Other interests: Travel, current Indian and international political trends, listening to soulful music, be it carnatic or old Tamil songs.

* * *

3 thoughts on “About

    1. பரவாயில்லை. பிஸியாக இருந்திருப்பீர்கள்.

      புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
      -ஏகாந்தன்

      Like

Leave a comment