காந்தி talks ?

மய்யம் என்ற ஒன்றை ஆரம்பித்து ஒரு மையமில்லாது போய்விட்ட ’உலக நாயகன்’, ஒரு கலைஞனாக மட்டும் மிளிர்ந்த காலகட்டம். துல்லியமாகச் சொன்னால் 1987 – இங்கே ஃபோகஸுக்கு வருவது. தெற்கு டெல்லியின் சிரிஃபோர்ட் ஆடிட்டோரியம் என்று நினைவு. நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல்.. ஒன்றில் இந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. புஷ்பக் – வடநாட்டு ஆடியன்ஸுக்கு. தெற்குப்பக்கம் அதன் பெயர் பேசும்படம்,  புஷ்பக விமானம் இப்படி. குறிப்பாக கன்னடப் பிரதேசத்தில் மட்டும் 25 வாரங்களைத் தாண்டி அட்டகாசம் செய்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய கமல் ஹாசன் படம். பெங்களூரின் சில இடங்களில் அமைக்கப்பட்ட சுவாரஸ்யக் காட்சிகள். வேலைவெட்டி இல்லா கமலைவிட தன்னிடம் அதிகம் உண்டு காசு என அமர்ந்திருக்கும் சாக்கைத் தூக்கிக் காட்டி சீண்டும் அந்த விஷமப் பிச்சைக்காரன் காட்சிப்படுத்தப்பட்ட இடம் – பெங்களூரின் வின்ஸர் மேனர் ஹோட்டல் அருகில். அமலாவின் அமெரிக்கையான அழகும்,  பாலிவுட்டின் (தூர்தர்ஷனின் ‘நுக்கட்’ சீரியல் புகழ்) சமீர் கக்கர், டினூ ஆனந்த் (ஐஸ் கத்தியோடு மிரட்டும் காமிக்கல் வில்லன்!) ஆகியோரின் நடிப்பும் அதகளம் செய்த ஒரு கனாக்காலத்தின் திரைவெளி. ‘ஒரு பிரேதத்தைச் சுற்றிக் காதலை வளர்த்திருக்கிறீர்களே.. படம் பார்க்க விரும்புகிறேன்!’ – என்று சிங்கீதத்திடம் சொன்னாராம் சத்யஜித் ரே.

இந்தப் புஷ்பக்கின் நினைவு காலையில் ஏன் தீண்டியது? காரணம்.கிஷோர் பாண்டுரங் பெலேகர் (Kishor Pandurang Belekar)! மராத்தி திரைமுகமான அவர் இயக்கியிருக்கும் காந்தி டாக்ஸ் (Gandhi Talks – காந்தி பேசுகிறார்). புஷ்பக் (பேசும்படம்) போல வசனமில்லாப் படம்- வெகுநாட்களுக்குப் பிறகு இந்தியத் திரைகளில். A dark comedy. இப்போதைய தலைமுறையினரில் புஷ்பக் போன்ற வித்தியாசமான, அழுத்தமான நடிப்புப் பங்களிப்புகளைத் தந்த படங்களைத் தேடிப் பார்ப்பவர்கள் குறைவு. அப்படி ஒரு படமும் எண்பதுகளில் வந்தது என்பதே பலருக்குத் தெரியாது. இந்தக் காலத்துக்கேற்றபடி ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பின்னணிகொண்டு கொஞ்சம் ட்ரெண்டிங்காக, பலர் தன்னை சம்பந்தப்படுத்திப் பார்க்கப் பொருத்தமாக ஒரு படத்தை எடுத்து வெளியே விட்டால் என்ன என்று பெலேகர் & கோ (Zee Studios /  Kyoorious Digital) கொஞ்சம் மற்றோரிடமிருந்து வேறுபட்டு யோசித்ததின் திரைவிளைவு காந்தி டாக்ஸ். ம.செ. விஜய் சேதுபதி, அதித்தி ராவ், அரவிந்த் சாமி, சித்தார்த் ஜாதவ் போன்றோர் வார்த்தையின்றி, உடல்மொழி மட்டுமே கொண்டு ஜாலம் காட்டியிருக்கிறார்களா? எப்படி! பார்த்தால்தான் தெரியும் படமும், அது செல்லும் தடமும். இந்த வருடம் திரையில் ஒளிரும்..

**

Advertisement

5 thoughts on “காந்தி talks ?

  1. @ ஸ்ரீராம்:

    டீஸர் வந்திருக்கிறது போலிருக்கிறது. விரைவில் வெளியாகும் . இண்ட்ரஸ்ட்டிங்காக இருக்கலாம்!

    Like

  2. புஷ்பக் னு சினிமாவா? அதுவே கேள்விப்பட்டதில்லையே…ஏகாந்தன் அண்ணா….பழைய சினிமா..நெட்ல இருக்கும் பார்க்கிறேன்…

    காந்தி டாக்ஸ் – புச்சாகீதே…நடிகர்கள் பெயர் எல்லாம் படம் நல்லாருக்கும்னு சொல்வது போல இருக்கு விசே, அசா….படத்தின் பெயரைக் குறித்துக் கொண்டுவிட்டேன்…

    கீதா

    Liked by 1 person

    1. @ கீதா:
      புஷ்பக்கை நீங்களே கேள்விப்பட்டதில்லையெனில், மற்றவர்களைப்பற்றி நான் என்ன சொல்ல! கிடைத்தால் உடனே பாருங்கள். நவீன யுகத்தின் வசனமில்லாப் படத்தைப் பார்ப்பது என்பதே ஒரு அனுபவமல்லவா? புஷ்பக் (அல்லது (தமிழில்) ’பேசும்படம்’) தேடிப் பார்த்துவிட்டு, அப்பறம் கவனியுங்கள் காந்தியை !

      Posted some stills of the movies…

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s