பொங்கலன்று ஸ்ரீலங்காவுக்கெதிரான கடைசி ஒரு-நாள் கிரிக்கெட் போட்டியில் முன்னால் கேப்டன் விராட் கோஹ்லி ஆடிய விதம் (13 பவுண்டரி, 8 சிக்ஸர்), அவர் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்பதை உறுதிப்படுத்துகிறது. நாளை (18-1-23) ஹைதராபாதில் துவங்கவிருக்கிற நியூஸிலாந்துக்கெதிரான ஒரு-நாள் தொடர் அதை மேலெடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த டிசம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான தொடர், இந்த மாதம் முடிந்த ஸ்ரீலங்கா தொடர், வரவிருக்கும் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு-நாள் தொடர்கள் – ஏன் இப்படி ஒவ்வொரு அயல்நாட்டு அணியும் வேகவேகமாக இந்தியாவில் வந்து ஆடுகின்றன? வரவிருக்கும் அக்டோபர் –நவம்பரில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒரு-நாள் உலகக் கோப்பையே காரணம். இந்திய பிட்ச்சுகளில் ஆடிய அனுபவம் உலகக்கோப்பையில் அவர்களுக்குக் கைகொடுக்கும் அல்லவா?

நியூஸிலாந்து தொடரில் ஆடுவதிலிருந்து கே.எல். ராஹுல், அக்ஷர் பட்டேல் ஆகியோர் கிரிக்கெட் போர்டினால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் – அவர்களது பர்ஸனல் கோரிக்கைகளின்படி. இந்த இடத்தில் ஆடப் பொருத்தமானவர்கள்: சமீபத்தில் அதிவேக 200 அடித்த இஷான் கிஷனும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும். டி-20 சூப்பர்ஸ்டார் சூர்யகுமாருக்கும் உள்ளே வந்து கலக்க வாய்ப்பு கிட்டவேண்டும். ரோஹித்தையும், கோஹ்லியையும் வெகுநாட்கள் நம்பிக்கொண்டிருக்கமுடியாது. வளர்ந்துவரும் வீரர்களுள் ஒருவரான ஷுப்மன் கில் (Shubman Gill) ஓப்பனராகத் தொடரலாம். அல்லது கிஷன் முன்னேறி அந்த இடத்தைக் கைப்பற்றலாம். ஷ்ரேயஸ் ஐயரும் இடையில். மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன், இடது கை சுழல் யுஸி சாஹல் – தற்போது காயப் பட்டியலில்!

வேகப்பந்துவீச்சில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தொடரில் உத்வேகம் காட்டிய முகமது சிராஜ் முன் வரிசையில் நிற்கிறார். உலகக்கோப்பைக்காகத் தன்னை அவர் கடுமையாகத் தயார்செய்துகொண்டிருப்பது, ஸ்ரீலங்காவுக்கெதிரான கடைசி மேட்ச்சில் அவர் போட்ட பௌலிங் (4 விக்கெட்டுகள்) காண்பித்தது. பும்ரா இன்னும் உடற்தகுதி பெற்று ரெடியாகாத நிலையில், சிராஜ் இந்தியாவின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர். ஜம்மு எக்ஸ்ப்ரெஸ் உம்ரான் மாலிக் தன் கரியர் க்ராஃபில் வெகுவான முன்னேற்றம் காண்பித்துவருவதும் மகிழ்ச்சி தருகிறது . ஸ்பின் பிரிவில், குல்தீப் யாதவ் எதிரிகளைத் தொடர்ந்து சிக்கலில் மாட்டிவருகிறார். வாஷிங்டன், அக்ஷர் ஆகியோர் அவர்கூட உலகக்கோப்பை பவனி வரலாம். இருவரும் பேட்டிங்கில் அடித்து விளாசும் திறனுடையவர்கள் என்பதும் போனஸ்.
தொடர், தொடராக பார்க்கவேண்டியிருக்கிறது – இவர்கள் யாவரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதை. வரவிருக்கும் போட்டிகளில் இவர்களின் பங்களிப்பைப் பொறுத்தே உலகக்கோப்பைக்கான இந்திய அணி முழு உருவெடுக்கும்.
**
Pics from Google: Washington Sundar & Ishan Kishan
ஏதோ பொழுது போகிறது என்று சொல்லுங்கள்… கோஹ்லி தொடர்ந்தும் இப்படியே ஆடுவார் என்று நம்புவோம். பந்துவீச்சில் இன்னும் நல்ல ஆட்கள் வரவேண்டும்.
LikeLiked by 1 person
@ Sriram:
வேகப்பந்துவீச்சில் காயத்துக்கு சிலரை இழந்திருக்கிறோம் இப்போது: பிரஸித் க்ருஷ்ணா, ஜஸ்ப்ரித் பும்ரா, தீபக் சாஹர் இப்படி. நமது வேகத்தை அவர்கள் ’ஆராம்ஸே’ விளாசிவிடுவார்கள். ஸ்பின்னயும் ஒரு கை! மொத்தத்தில் இந்தத் தொடர் தூள் கிளப்பும் எனத் தெரிகிறது.
LikeLike