விக்ரம் – Just a chartbuster ?

ஃபினாமினல், ப்லாக்பஸ்ட்டர், சார்ட்பஸ்ட்டர் என்றெல்லாம் ஒரு படத்தின் ‘வெற்றி’யைப்பற்றிப் பிரஸ்தாபிப்பது என்பது, அது அள்ளிக்கொடுத்த பண விஷயத்தைப் பிரதானமாக வைத்துத்தான், பொதுவாக. 200 ஐத் தாண்டிருச்சா, என்ன.. 400-க்கும் மேல போய்க்கிட்டிருக்கா! – போன்ற ஆஹா.. ஓஹோக்கள் திரைப்படம்பற்றிய கமர்ஷியல் ஆங்கிள் பிரமிப்புகளே. வியாபாரமாகவே உருமாறிவிட்ட உலகில், வியாபாரம்பற்றித்தானே எப்போதும் பேசுவார்கள்? குதிப்பார்கள்? அதில் தவறென்ன சொல்லமுடியும்.

விக்ரம் (2022)

இந்தப் படத்தை நான் பார்க்க விரும்புவது குறிப்பாக ஃபஹத் ஃபாஸில் (Fahadh Faasil), விஜய் சேதுபதி நடிப்பிற்காக. ஆங்காங்கே இவர்கள் இருவரின் பங்களிப்புபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதால். மேலும், லோகேஷ் கனகராஜ் அவ்வளவு நல்ல இயக்குனரா என்ன? சினிமாவை ஒரு கலானுபவமாக, அதாவது ஒரு சீரியஸ் மீடியம் என அவதானித்து, ‘செலெக்ட்’ படங்களாகப் பார்த்துவருவதால்தான், இவ்வாறான சிந்தனை. விக்ரம் ஒரு ஆர்ட் படமல்ல. ஒரு சத்யஜித் ராய், மிருணாள் சென், அரவிந்தன் படத்தைப்போல் திரையில் இழையும் கவிதையல்ல என்பது தெரிந்ததே (தினத்தந்தி மன்னிக்க)! வணிகமே இதிலும் குறிக்கோள் எனினும், கலைக்கோணத்தில் சிறந்த நடிப்பு, இயக்கப் பங்களிப்புகள் உண்டோ இந்தப் படத்தில் எனத் தெளிவாவதில் ஒரு சந்தோஷம். படத்தை நிதானமாக உட்கார்ந்து பார்த்தால்தான் இந்த விஷயங்களைப்பற்றி அறிய நேரும். கூடவே, கமல் அங்கிளின் நடிப்புத் திறன் அப்படியே இருக்கா, இல்லை, ஒருமாதிரி ‘மய்ய’மாகப் போய்விட்டிருக்கிறதா என்பதையும் தெரிந்துகொள்ள! ஏனெனில், வெறுமனே சுஹாசினி தன் சித்தப்பாபற்றி வானளாவ சொல்லும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு திருப்திப்பட்டுக்கொண்டிருக்கமுடியாதே..

**

8 thoughts on “விக்ரம் – Just a chartbuster ?

 1. உங்களின் இலக்கிய ரசனை குறித்துத் தெரியும்.

  இருந்தாலும், சும்மா வெட்டியா பொழுது போகணும் என்றால் விக்ரம் படம் பார்க்கலாம். எந்த லாஜிக்கும் பார்க்காமல், யோசிக்காமல், மேஜிக்காக காட்சிகளைக்கண்டு பிரம்மிக்கணும்னா தாராளமாகப் போய்வரலாம்.

  அப்புறம் என்ன கதையாக இருக்கும் இது என்றெல்லாம் யோசித்துத் தலைவலி வந்தால் சமூகம் பொறுப்பல்ல.

  காலத்தின் ரசனை மிகவும் கீழிறங்கியிருப்பதன் உதாரணங்கள்தாம் புஷ்பா, கேஜிஎஃப், விக்ரம் மாதிரியான படங்கள்

  Liked by 1 person

 2. கமலுக்காக இல்லாவிட்டாலும் பஹத் பாசிலுக்காக பார்க்கலாம்.  இயக்குனரின் சாமர்த்தியத்துக்கும் பார்க்கலாம்.  கமல் ஊறுகாய்.  விஜய் சேதுபதி எனக்குப் பிடிக்கவில்லை.

  Liked by 1 person

 3. @ நெல்லைத்தமிழன், @ ஸ்ரீராம்:

  Out and out மசாலாப்படம்தானோ இது! கமலும், கனகராஜும் திரையில் ஏதோ செயற்கரிய செய்துவிட்டதுபோலே புகழ்மாலைகள் வரிசையாக விழுந்துகொண்டிருக்கின்றன! தமிழ்ச் சூழலில் அது சினிமாவோ, அரசியலோ வேறு துறையோ – அறிதல் கொஞ்சம், புரிதல் கிட்டத்தட்ட இல்லை என்பதே இன்றைய சோக நிலை! என்ன செய்வது?

  சரி, மணிரத்னம் பொன்னியின் செல்வனில் என்ன செய்திருக்கிறார் என்று ஆராயக் காத்திருப்போம்! அவரிடமிருந்து உருப்படியாகக் கொஞ்சம் எதிர்பார்க்கலாம்தானே?

  Like

 4. ஏகாந்தன் அண்ணா நானும் படத்தைப் பற்றி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சென்று விட்டேன். அதுவும் அண்டர் கவர் ஏஜன்ட் என்று சொன்னதால். எனக்கு ரொம்பப் பிடிக்கும் அண்டர் கவர் ஏஜன்டுகள் செய்யும் துப்பறியும் வேலைகளைப் பற்றி அறிய. (அதாவது நல்ல வழிக்கு, நல்ல விஷயங்க்ளுக்கு நாட்டைக் காக்க போன்றவை)

  ஹூம் எனக்குப் படம் பிடிக்கவில்லை. லாஜிக் ஓட்டைகள் ஏராளம். எனக்கு ஃபகத் ஃபாசில் பிடிக்கும். இதிலும் அவருக்குக் கொடுக்கப்பட்டதை நன்றாகச் செய்திருக்கிறார். அவ்வளவே. அவருக்கு இன்னும் நடிப்புத் தீனி போடலாம்.

  விஜய் சேதுபதி நல்ல நடிகர்தான் ஆனால் இதில் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் லோகேஷ் வைத்திருந்த சீன் ஷாட் பிடிக்கவில்லை. கண்றாவி.
  கதையில் அண்டர்கவர் ஏஜன்ட் என்பதற்கான நியாயம் எதுவுமில்லை.

  நானும் படம் பற்றி எழுதியிருக்கிறேன் அண்ணா.

  கீதா

  Liked by 1 person

 5. Its only a commercial success!!!!! மற்றபடி அதில் வெற்றி என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  //கமலும், கனகராஜும் திரையில் ஏதோ செயற்கரிய செய்துவிட்டதுபோலே புகழ்மாலைகள் வரிசையாக விழுந்துகொண்டிருக்கின்றன!//

  ஹாஹாஹாஹா அதே அதே….

  கீதா

  Like

  1. @ கீதா: அவர்கள் பீற்றிக்கொள்வதைப் பார்த்தால், கமல் ஏதோ இன்னொரு ‘நாயகனை’க் கொடுத்துவிட்டதுபோல ஒரு தோறறம் தருகிறார்கள். வெறும் மசால்வடைதானா!

   நீங்கள் எழுதியிருப்பதை வந்து பார்க்கிறேன்..

   Like

   1. வெற்றி பெற்றுவிட்டால் ஏதோ செயற்கரிய செயலைச் செய்து வெற்றி பெற்றதுபோலப் படம் காட்டுவார்கள்.

    அது சரி… மணிரத்னம் அவர்களின் பொ.செ. படம் பார்க்கக் காத்திருக்கிறீர்களா? என் மனதில் ‘இருவர்’ படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. பாவம் அவரும், நாமும். பொ.செ. மாதிரியான எபிக்கைப் படமாக எடுக்கவே முடியாது, எடுத்தாலும் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தவே இயலாது. ஏற்கனவே மணிரத்னம் அவர்கள் A, B ரசிகர்களை மாத்திரம் குறிவைப்பார். 6 மணி நேரத்தில் எப்படி கதையைச் சொல்லி, ட்விஸ்ட் வைத்து…

    Liked by 1 person

 6. @நெல்லைத்தமிழன்:
  இரண்டு பாகப் படமல்லவா பொன்னியின் செல்வன். சினிமாவுக்கு அவ்வளவு நீளம் அதீதமானது. இயக்குனரின் திறமையில் இருக்கு பெருங்கதை திரைக்குள் உருண்டு, திரண்டு வருவது. நடிக, நடிகையரிடமிருந்து கலையை வெளிப்படுத்துவது. பார்க்கவேண்டிய படமாக நிச்சயமிருக்கும் எனத் தோன்றுகிறது. கமர்ஷியல் ஹிட் ஆகுமா என்று சொல்வதற்கில்லை.

  இப்போதெல்லாம், தமிழில் இருக்கும் உருப்படியான டைரக்டர் என்றால், மணிரத்னத்தைத் தவிர வேறு யாரும் நினைவுக்கு வருவதில்லை எனக்கு.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s