’சொல்வனம்’ கலை, இலக்கிய இதழில் வெளியான எனது சிறுகதைகள் – ’பின்னிரவின் நிலா’ மற்றும் ’நிஜமாக ஒரு உலகம்’ – இரண்டும் இப்போது ‘சொல்வனம் யூ-ட்யூப் சேனலில்’ பார்க்க/கேட்கக் கிடைக்கின்றன. நன்றி : சொல்வனம் ஆசிரியர் குழு / சரஸ்வதி தியாகராஜன்.
YouTube லிங்க் :
இணையத்தில் வாசிக்க விரும்புபவர்கள் solvanam.com சென்று வழக்கம்போல் வாசிக்கலாம்.
**
இப்போதைக்கு கதைகளை கேட்பதைவிட படிப்பது சுகம்! – இப்போதைக்கு! ஆனால் நன்றாக ப்ரசண்ட் செய்திருக்கிறார்.
LikeLike
@ ஸ்ரீராம்: உங்களது இந்தப் பாராட்டை சரஸ்வதி அவர்களுக்குத் தெரிவிக்கிறேன். நன்றி
LikeLike
மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் கதையைக் குரல் வடிவில் தெளிவாகக் கொடுத்திருக்கும் சரஸ்வதி தியாகராஜன் அவர்களுக்கும். கேட்டேன் என்றாலும்…
கேட்பதை விட வாசித்தல் எனக்குச் சௌகரியப்படும் என்பதால் சொல்வனம் சென்று வாசிக்கிறேன் அண்ணா. வாசித்துவிட்டு வருகிறேன்.
கீதா
LikeLiked by 1 person
@ கீதா : வாழ்த்துகளுக்கு நன்றி. வாசித்துத் திரும்புக !
LikeLike
நிஜமாக ஒரு உலகம் வாசித்தேன்.
மனம் என்பது ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு விதம் அதில்தான் எத்தனை வகைகள். விவேக்கின் கதாபாத்திரம் Introvert என்பது என் புரிதல். அவனது உலகம் தனி ஏனோ யதார்த்த உலகிலிருந்து ஒரு விலகல். நல்லகாலம் அதீதமாக விலகியிருக்கவில்லை. அதற்கு அர்த்தம் வேறாகிவிடும். அவன் மனம் பார்டர் மனம். அப்படியானவர்களுக்கு யாரேனும் ஒருவர் அல்லது இருவர் ஈர்க்கலாம்தான். எப்படிப்பட்டவர்களையும் ஈர்ப்பது குழந்தைகள் அதுவும் தன்னிடம் அன்பு செலுத்தும் பிஞ்சுக் குழந்தை. ஒரு வேளை மஞ்சு – அக்குழந்தை விவேக்கை இன்னும் யதார்த்த உலகிற்குக் கொண்டு வருவாள் என்று வாசகர்களின் முடிவில் விட்டிருப்பது நன்று.
அண்ணா உங்களின் அறிவார்ந்த கதைக்கு என் சிறிய அறிவுக்கு எட்டியது இவ்வளவே!!!!
கீதா
LikeLike
@கீதா:
இதழிற்குப்போய் ரசித்துப் படித்து, விரிவாகக் கருத்தெழுதியதற்கு நன்றி.
இன்னும் சில கதைகள் ஆங்காங்கே உருப்பெற்று வளர்கின்றன என் வெளியில். பார்ப்போம் எப்போது வெளிச்சம் காணும் என!
LikeLike
பின்னிரவின் நிலா – வாசித்தேன். முடிவு ஊகிக்க முடிந்தது. நன்றாக இருக்கிறது. முன்பு வலையில் வந்திருந்ததோ?
வாழ்த்துகள்.
கீதா
LikeLike
@ கீதா
சொல்வனத்திற்காகவே எழுதப்பட்ட கதைகள் இவை. வேறெங்கும் வெளிவரவில்லை. என் வலைப்பக்கத்தில் லிங்க் மட்டும் கொடுத்திருந்தேன்.
LikeLike