கொட்டவா.. இன்னும் கொட்டவா ?

வருஷத்தில் பாதிநாள் தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கிறோம். மீதி நாட்களில், தண்ணீரில் மூழ்கியே செத்துவிடுகிறோம் !

இது என்ன, ஏதாவது புதுப்பட வசனமா? இல்லை சஞ்ஜிப் பானர்ஜியும், ஆதிகேசவலுவும் சேர்ந்து அலறிவைத்தது. எந்தத் தேள் கொட்டியது? யார் இந்த மஹானுபாவர்கள்? மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜுகள்தான். பொறுக்கமுடியவில்லை போலிருக்கிறது. வாயிலிருந்து கொட்டிவிட்டது வார்த்தை. ஹைகோர்ட்டு வளாகத்திலும் தண்ணி புகுந்துவிட்டதோ என்னவோ? ஆக்‌ஷன் எடுக்காவிட்டால்.. நீதி அரசர்கள் சென்னை கார்ப்பரேஷனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். கார்ப்பரேஷன் என்பதென்ன, பொட்டிக்கடைதானே.. பெருவணிகமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப்பார்ப்பதுதானே?

In Chennai, rains stop, but problems continue to persist - Rediff.com India News

சமூகநீதிக்குப் பேர்போன அரசு என்ன சொல்கிறது? ’சமரசம் உலாவும் இடம்.. நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே..!’ – என வெள்ளக்காடாய் மாறிவிட்ட சென்னையின் கோலாகலத்தைப் பார்த்து, கோவிந்தராஜன் மாதிரிப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறதா? அது சொன்னது இது: மழையோ, வெள்ளமோ எங்களுக்கு அதெல்லாம் தெரியாது; முன்னாடி ஆண்டவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்..

கொட்டிக்கொட்டிப் பேசி.. கதிகலங்கவைக்கும் வானம்.

கார் மிதக்குது, கட்டடம் மிதக்குது,  ஊரே மிதந்து ஓடமா ஆடுது.

இப்படியே போனா..

விடிஞ்சிரும் !

**

3 thoughts on “கொட்டவா.. இன்னும் கொட்டவா ?

 1. இவர்கள் கூட இவ்வளவு தாமதமாகத்தான் கேட்கிறார்கள்.  கொஞ்சம் முன்னால் கேட்டு செயல்பட வைத்திருக்கலாம்.

  Liked by 1 person

 2. எந்த ஆட்சியானால் என்ன? எந்த தலைவரானால் என்ன? எந்த நிர்வாகியானாலும்…எப்பவுமே தாமதம் தானே? முன்ஜாக்கிரதை முத்தண்ணா நடவடிக்கைகள் என்றைக்கு எடுத்திருக்கிறார்கள்?

  கீதா

  Liked by 1 person

 3. @ ஸ்ரீராம், @ கீதா :

  வருமுன் காப்பவன் தான் அறிவாளி… – என்று பாடுகிறார் சுந்தராம்பாள். தமிழ்நாட்டை அறிவாளி ஆண்டு அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.

  விடியல் வில்லன்களுக்குத்தான் தமிழ்நாட்டில் – ஹீரோக்களைப்போல் காண்பித்துக்கொண்டு அலையும் நிஜ வில்லன்கள். ஜனங்களின் தலையில் இன்னும் என்னென்ன எழுதியிருக்கிறதோ, யார் கண்டது?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s