கீழ்வரும் என் இரு கவிதைகள், ‘பதாகை’ இலக்கிய இதழில் (அக்டோபர் 11, 2021) பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி : பதாகை https://padhaakai.com
காற்றினிலே
தன்வீட்டு வாசலில்
ஒரு அந்திப்பொழுதில்
தனியாக உட்கார்ந்திருக்கிறான்
அந்த வயதான மனிதன்
கண் மங்கி நாளாகிவிட்டது
காது நன்றாகக் கேட்கிறது
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
யுவதிகள் சிலரின் பேச்சுக்குரல்கள்
கேட்க ஆரம்பிக்கின்றன
அவனுக்கு எதிர்த் தெருவில்
அவர்கள் நெருங்க நெருங்க
அந்தக் குரல்களின் கட்டற்ற குதூகலத்தில்
உணர்கிறான் அவர்களின் யௌவனத்தை
உயிர்த்தெழுகிறது ஏதோ அவனுக்குள்
கண்கள் குவிந்து பெண்ரூபங்களைத் துருவ
காதுகளை மென்னொலி அலைகள்
கதகதப்பாய் வருடுகின்றன
சிலிர்த்துக்கொள்கிறான்
மத்தாப்புச் சிரிப்புகள் மெல்ல நடக்க
மயக்கும் குரல்கள் மங்கி மறைய
பெருமூச்சு விடுகிறான்
தளர்ந்த வயோதிகத்தின் கரங்கள்
தழுவிக்கொள்கின்றன அவனை ஆதரவாக
**
ஜீவிதம்
கவிழ்க்கப்பட்ட நிலையில்
விசித்திர மதுக்கோப்பை
இந்த பிரம்மாண்ட ஆகாசம்
அதிகமாக நக்ஷத்திரமும்
மிதமாக சந்திரனும்
கொஞ்சமாக சூரியனுமாய்
கிறங்கவைக்கும் காக்டெய்ல்
களிப்போடு இதழ் பொருத்தி
மெல்ல மெல்ல உறிஞ்சுகிறேன்
கந்தர்வ போதையில்
கரைகிறது காலம்
**
1. பெரியவரின் ஆசை! 2. பேராசை!!
LikeLiked by 1 person
ஏகாந்தன் அண்ணா இப்பதிவு வெளி வந்ததுமே வாசித்துக் கருத்து போட்டும் கருத்து போகவே இல்லை இப்போதும் மீண்டும் முயற்சி, எந்தத் தளத்திலும் போகவில்லை நேற்று எபியில் இரு கருத்துகள் போச்சு கஷ்டப்பட்டு அப்புறம் எதுவும் போகவில்லை.
பதாகையில் வெளிவந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
முதல் கவிதை – பெரியவரின் ஆசையைப் பாருங்க! இந்த வயதிலும் !! இளமை!!
இரண்டாவது கவிதை – கந்தர்வ போதையில் கரைவது காலம் மட்டுமல்ல அவனும் தானோ!?
கீதா
LikeLiked by 1 person
அட! இங்கு பதிந்து விட்டது. வேர்ட் ப்ரெஸ் என்பதாலோ?!
மற்ற ப்ளாகர் தளங்களில் கருத்து போகவில்லை
கீதா
LikeLike
@ ஸ்ரீராம்: பேராசை என்பதும்.. பாவம், ஆசைதானே!
@ கீதா: கருத்து போகவில்லையா? ஆதார் கார்டு கேட்கிறதா!
கரைந்து காணாமற்போவதைத் தவிர கலியுகத்தில் ஒரு ஜீவன் வேறென்ன சாதிக்க இருக்கிறது ?
LikeLike
மிகவும் யோசிக்க வைத்தது.
எல்லோரையும் அண்டும் முதுமை.
LikeLiked by 1 person
@ Revathi Narasimhan :
ஜீவனின் உயிர்குடிக்க வண்டுபோல் அண்டும், சுற்றிவரும் முதுமை !
LikeLike