இரண்டாவது ஒரு-நாள் போட்டியை லங்கா உத்வேகமாக ஆடியது. அவிஷ்கா, அஸ்லங்காவின் அரைசதம், கடைசியில் இறங்கும் கருணரத்னவின் 44 நாட் அவுட் என இந்திய பௌலிங்கை ஒரு கை பார்த்து 275 என போஸ்ட் செய்தார்கள். புவனேஷ்வர் (3), சாஹல்(3), தீபக் சாஹர்(2) இந்தியாவுக்காக நன்றாகப் பந்து வீசினார்கள்.
இந்தியா பதிலளிக்கையில், ப்ரித்வி ஷா 3 பௌண்டரிகளுடன் ஆரம்பிக்க, லங்கா கேப்டன் மாத்தி யோசித்தார். இவனை விட்டால் ஆபத்து! ஹஸரங்காவின் ஸ்பின் மூன்றாவது ஓவரில். ப்ரித்வி ஷா அவுட் bowled. அடுத்தாற்போல் இஷான் கிஷனைக் காலி செய்த ரஜிதா. தவண் திணறல். நன்றாக ஆடியும் பாண்டே(37) ரன் அவுட். சூர்யகுமார் மட்டுமே விளாசி அரைசதம். ஹர்தீக் பாண்ட்யா 0. க்ரீஸுக்கு வந்தவுடன் ஓவராக அலட்டிக்கொண்ட க்ருணால் பாண்ட்யாவின் மண்டையில் மாறி, மாறிப்போட்டுத் திணறவைத்த துஷ்யந்தா சமீரா! க்ருனால் தட்டுத்தடுமாறி 35. சூப்பர் சூர்யா (44 பந்தில் 53) அவுட் ஆகையிலேயே இந்தியா நிலைகுலைந்துவிட்டது. ஸ்கோர் 160/6. 8-தீபக், 9-புவனேஷ்வர், 10-குல்தீப், 11-சாஹல் – இந்த அசடுகளை வைத்துக்கொண்டு இன்னும் 116 ரன்னா எடுக்க முடியும்? சான்ஸே இல்லை எனத் தோன்றிய கட்டத்தில், பாதிப்பேர் டிவி-ஐ அணைத்துவிட்டு குறட்டைவிட ஆரம்பித்திருப்பார்கள்தான்.

Deepak Chahar
விழித்துக்கொண்டு விளையாடியவர் ஆனார், India’s sudden hero! ஓவராக தூக்கி அடித்து ஆக்ரோஷ அலட்டாமல், நிதானமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். புவனேஷ்வர் குமாரை அடுத்தபக்கத்தில் வைத்துக்கொண்டே, அவ்வப்போது பௌண்டரி, சிக்ஸரும் தட்டி இந்தியாவை கரை சேர்த்துக் கலக்கிவிட்டார் தீபக் சாஹர். Career-best 69 not out. வெற்றியின் விளிம்பில் நின்றிருந்த லங்காவைப் பின்னே தள்ளிவிட்டு வென்றது இந்தியா. லங்காவின் தரப்பில் நன்றாக ஸ்பின் போட்டுத் தாக்கினார் வனிந்து ஹஸரங்கா. எதிர்கால லங்கா ஸ்டாரோ..
ஜெயித்திருக்க வேண்டிய மேட்ச்சை தோற்றதால், லங்கா கேப்டன் ஷனகாவுக்கும் கோச் மிக்கி ஆர்தருக்குமிடையே சூடாக வாக்குவாதம் கிளம்பியிருக்கிறது மைதானத்தில். வீடியோ ஆனது வைரல்!
ஹர்தீக் பாண்ட்யா -பேட்டிங், பௌலிங்- இரண்டிலுமே தடுமாறிக்கொண்டிருக்கும் இக்கட்டான இந்திய நிலையில், ஒரு சரியான ஆல்ரவுண்டராக, வெள்ளைப்பந்து போட்டிகளில், தீபக்கை நம்பலாம் போலிருக்கிறது. You are good enough to bat at No.7 -என்று திராவிட், பேட் செய்யப்போகுமுன் தன்னிடம் சொன்னார் என்கிறார் தீபக். பார்ப்போம் – இன்னும் கதை நிறைய இருக்கிறது.
**
எதிர்பாராத அதிசய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்! நீங்கள் சொன்னதுபோல நான் ஆண்டுவிலேயே கழன்றுகொண்டேன். இரவு பனிரெண்டரைக்கு மகனை வாழ்த்த எழுந்து வரும்போது வெற்றி பெற்றுவிட்டதாகச் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது.
LikeLike
//நீங்கள் சொன்னதுபோல நான் ஆண்டுவிலேயே கழன்றுகொண்டேன். //
நீங்கள் சொன்னதுபோல நான் அப்போதே கழன்றுகொண்டேன். !!
LikeLike
@ Sriram: ஓ.. மகனின் பிறந்தநாள் gift ஆகிவிட்டதா இந்த surprise victory!
LikeLike