கிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC)

கோவிட்-19 உலகையே புரட்டிப்போட்டு அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு அபாயகர காலகட்டம். Bio-secure சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இங்கிலாந்தின் சௌதாம்ப்டனில் (Southampton) இன்று (18/6/21) ஆரம்பிக்கிறது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் மேட்ச் இறுதிப்போட்டி. கிட்டத்தட்ட 10 வருடங்களாகத் திட்டமிடப்பட்டு, பல்வேறு வகைக் குழப்பங்கள், தாமதங்களுக்குப் பின் கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறோம் கிரிக்கெட்டின் அசல் சேம்பியன்ஷிப்பிற்கு. சமபல அணிகளான நியூஸிலாந்தும் இந்தியாவும் மோதுகின்றன. இது கோஹ்லி vs வில்லியம்சன் போட்டியாகப் பார்க்கவும்படுகிறது. Fire and Ice எனத் தலைப்பிடும் Espn Cricinfo!

இரு அணிகளின் வலிமை என்பது கடந்த போட்டிகளை வைத்துப்பார்க்கும்போது சமமாக இருப்பதாக ஒரு தோற்றம். இந்தியா தன் பௌலிங் காம்பினேஷனில் கவனமாக இல்லையெனில் மேட்ச்சை இழக்க வாய்ப்பு இருக்கிறது என எச்சரித்தார்கள் முன்னால் வீரர்கள். பொதுவாக 5 பௌலர்கள், 6 பேட்டர்கள் (batters-விக்கெட்கீப்பர் உட்பட) என்கிற சூத்திரமே அணுகப்படுகிறது. அதையே இந்தியா இந்தப் போட்டிக்காகவும் எடுத்துக்கொண்டிருக்கிறது. இஷாந்த் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி – வேகப்பந்துவீச்சாளர்கள். அஷ்வின், ஜடேஜா  ஸ்பின்/ஆல்ரவுண்டர்கள். பேட்டர்கள் (Batters): ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, அஜின்க்யா ரஹானே மற்றும் ரிஷப் பந்த் (வி.கீ). துரதிர்ஷ்டவசமாக இன்னொரு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஹனுமா விஹாரிக்கு இடமில்லை. கே.எல். ராஹுல், அக்ஷர் பட்டேல், வ்ருத்திமான் சாஹா எல்லாம் இல்லை!

நியூஸிலாந்தின் பேட்டிங் வரிசை இப்படி இருக்கலாம்: டெவன் கான்வே, டாம் லேத்தம், வில்லியம்சன், ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங் (வி.கீ.). வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், கைல் ஜேமீஸன், நீல் வாக்னர், மேலும் ஸ்பின்னர் (இந்திய வம்சாவளி) அஜாஸ் பட்டேல். வேகப்பந்துவீச்சாளர் மேட் ஹென்றி உள்ளே எனில், நீல் வாக்னர் வெளியே போகலாம். எப்படியிருப்பினும் ஒரே ஒரு ஸ்பின்னரைத்தான் நியூஸிலாந்து கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. மிட்ச்செல் சாண்ட்னர் காயப்பட்டிருப்பதால், அஜாஸ் பட்டேல்தான் விளையாடுவார்.

ஸௌத்தாம்ப்டன் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே பெரும்பாலும் துணைபோகும். இடையிடையே மழைக்கும் வாய்ப்பு உண்டு. தினமும் கொஞ்சம் மழைவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஸ்விங் மாஸ்டர்களான டிம் சௌதீ, ட்ரெண்ட் போல்டுக்கு ஒரே ஆனந்தம்தான். இந்த ஜோடியோடு சேர்ந்து ப்ராதனமாக கைல் ஜேமிசன் வீசக்கூடும். இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் குறிப்பாக ஒரு ஒழுங்கு, முனைப்போடு ஆடினால்தான் பின் வருபவர்கள் நிலைத்து ஆட வழிவகுக்கும். ஒரு மழை இடைவேளைக்கு அப்புறம் பேட் செய்பவர்கள் உடனே விக்கெட்டைப் பரிகொடுக்கும் சம்பவங்கள் நிகழக்கூடும். ரிஷப் பந்த், புஜாரா, ரோஹித் ஆகியோர் குறிப்பாக கவனிக்கப்படுவார்கள். ரஹானே குறிப்பாக இங்கிலாந்து பிட்ச்சுகளில் சரியாக ஆடுவதில்லை என்கிற விமரிசனம் உண்டு. அவர் கதை எப்படிப் போகுமோ?

கோஹ்லி அனேகமாக டாஸைத் தோற்பார். மேட்ச்சை இழக்காதிருந்தால் சரி!

ஒரு-நாள் உலகக்கோப்பையை இங்கிலாந்திடம் ‘இழந்துவிட்ட’ நியூஸிலாந்து, உலகின் முதல் டெஸ்ட் சேம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச்செல்ல முனைப்பு காட்டி ஆடும். கோஹ்லிக்கு உலகக்கோப்பையை உயரப்பிடிக்கும் அதிர்ஷ்டம் இருக்கிறதா என்பது ஜூன் 22-ஆம் தேதி தெரிந்துவிடும். (ஒரு எமர்ஜென்சிக்காக ஒரு உபரி நாள் கொடுக்கப்பட்டிருக்கிறது இந்த இறுதிப்போட்டிக்கு). 4000 பேருக்கு மட்டும் ஆட்டத்தை நேரடியாகக் கண்டு களிக்க என, டிக்கெட்டுகள் இங்கிலாந்தின் கிரிக்கெட் வாரியத்தால் (England and Wales Cricket Board) விற்கப்பட்டுள்ளன. உலக சேம்பியன்ஷிப் ஆட்டத்தில் ஸ்டேடியம் காலியாகக் கிடந்தால், என்ன ஒரு அபத்தம்!

இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1/HD சேனல்கள் ஒளிபரப்பும் இந்தப் பரபரப்பு மிகுந்த சேம்பியன்ஷிப் ஆட்டத்தை. மழை போட்டுப் பிசையாமல் இருந்தால், அடுத்து வரும் நாட்கள் கடும் போட்டியைக் காட்டக்கூடும்.

**

2 thoughts on “கிரிக்கெட்: உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் (WTC)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s